News June 2, 2024

BREAKING: அருணாச்சலில் பாஜக அபார வெற்றி

image

அருணாச்சல பிரதேசத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 46 இடங்களை கைப்பற்றி முதல்வர் பெமா காண்டு தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கிறது. பெமா கண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 50 தொகுதிகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக 46, காங்., 1, என்பிபி 5, சுயேச்சை 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

News June 2, 2024

என் தவத்தின் ஆதாரம் விவேகானந்தர்: மோடி

image

விவேகானந்தர் தன்னுடை வழிகாட்டியாகவும், தன் தவத்தின் ஆதாரமாகவும் இருந்துள்ளார் என விவேகானந்தர் நினைவு பாறை பதிவேட்டில் மோடி குறிப்பிட்டுள்ளார். விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தது, தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்றும் தனது வாழ்வின் ஒவ்வொரு கணமும், தன் உடலின் ஒவ்வொரு துகளும் தேசத்தின் சேவைக்காக எப்போதும் அர்ப்பணிக்கப்படும் என மீண்டும் ஒருமுறை உறுதியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News June 2, 2024

வான் அளக்கும் பனிமலைச் சிகரங்கள்

image

வான் பரப்புடன் போட்டிப்போடும் விதமாக கண்களை வியக்க வைக்கும் மலைச்சிகரங்கள் உலகெங்கும் ஏராளம் உள்ளன. அவை ஒரே நாட்டுக்குள் அமைந்திருக்காமல் அண்டை நாடுகளின் எல்லைகளை கடந்தும் நீண்டு காட்சி அளிக்கின்றன. அத்தகைய மலைச்சிகரங்கள் சில உங்கள் பார்வைக்கு 1. எவரெஸ்ட் (நேபாள் – திபெத் எல்லை) 2.மகாலு 3.லோட்சே 4. சோ ஓயு (நேபாள் – சீனா எல்லை) 5.நங்கா பர்பத் (ஜம்மு-காஷ்மீர்) 6.கே2 (பாகிஸ்தான் – சீனா எல்லை).

News June 2, 2024

மக்கள் தீர்ப்பு விரைவில் தெரியும்: துரை வைகோ

image

அரசியலில் மதங்களை தவிர்த்து, மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய விவாதங்களே இருக்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், மதத்தின் பெயரால் பிரிவினை கருத்துக்களை ஊக்குவிக்க கூடாது எனக் கூறியுள்ளார். INDIA கூட்டணி சார்பில் மக்கள் நலன் சார்ந்த வாதங்களை பரப்புரையில் முன்வைத்ததாக கூறிய அவர், மக்கள் எதை ஏற்றார்கள் என்பது வாக்கு எண்ணிக்கையில் தெரிய வரும் என்றார்.

News June 2, 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை வரம்பு உயர்வு

image

மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை வரம்பை ( Gratuity limit) 25% உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அதிகபட்ச கருணைத் தொகை ₹20 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கருணைத் தொகை ஜனவரி 1, 2024 முதல் தொடங்குகிறது. பணிக்கொடைக்கு தகுதி பெற ஒரு ஊழியர் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். முன்னதாக மார்ச் 7ஆம் தேதி 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

News June 2, 2024

படிவம் 17சி என்றால் என்ன?(3/3)

image

இந்தப் படிவத்தின் அடுத்த பகுதியும் உள்ளது. வாக்கு எண்ணும் நாளில் அது பயன்படுத்தப்படும். இதில் ஒரு வேட்பாளர் எத்தனை வாக்குகள் பெற்றார் என்று எழுதப்படும். தேர்தல் நடத்தை நெறிமுறைகள் 1961இன் 49A & 56Cஇன் கீழ், தேர்தல் அதிகாரி வாக்குகள் பற்றிய தகவல்களை படிவம் 17Cஇன் பகுதி-1 இல் நிரப்ப வேண்டும். வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் அதிகாரி இத் தகவலை வாக்குச்சாவடி முகவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

News June 2, 2024

படிவம் 17சி என்றால் என்ன?(2/3)

image

17சி படிவத்தில், *EVM எந்த வரிசை எண்ணை சேர்ந்தது? *வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை *17-A இன் கீழ் வாக்காளர்கள் பதிவேட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை *விதி 49-AM-ன் கீழ் வாக்களிக்க அனுமதிக்கப்படாத வாக்காளர்களின் எண்ணிக்கை *வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை *வாக்கு சீட்டுகளின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் தேர்தல் அதிகாரியால் முழுமையாக நிரப்பப்படும்.

News June 2, 2024

படிவம் 17சி என்றால் என்ன?(1/3)

image

‘வாக்குச் சாவடியில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன’ என்பது பற்றிய தகவல் அடங்கிய ஆவணமே 17சி படிவம் என்று அழைப்படுகிறது. இது ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள தலைமை அதிகாரியால் தயாரிக்கப்படும் இந்த ஆவணம் தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் பெரும் பங்கை வகிக்கிறது. பூத் மட்டத்தில் முழுமையான வாக்காளர்களின் வாக்குப்பதிவு குறித்த விரிவான தரவை 17சி படிவம் மூலம் அறிய முடியும்.

News June 2, 2024

இந்தியாவின் அடுத்த கிரிக்கெட் தொடர்

image

டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை 6ஆம் தேதி முதல் ஜிம்பாப்வேவுடனான தொடரில் விளையாடவுள்ளது. அதனை முடித்தவுடன் ஜூலை 27ஆம் தேதி இலங்கை உடனான தொடர் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இத்தொடரில் 2 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த இரண்டு நாடுகளுக்குமே இந்திய அணி சுற்றுப்பயணம் செல்கிறது.

News June 2, 2024

இவிஎம் சிப்புகளை பரிசோதிக்கலாம் : EC

image

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வாக்கு இயந்திரங்களில் உள்ள சிப்புகளை பரிசோதிக்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்க 2,3ம் இடம் பிடித்தவர்கள், தேர்தல் முடிவுகள் வெளியான 7 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும். வேட்பாளர்கள் விண்ணப்பக் கட்டணம் ₹40,000 உடன் +18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

error: Content is protected !!