News June 2, 2024

முக்கிய வீரர் இல்லாமல் களமிறங்கும் வங்கதேச அணி?

image

டி20 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் இடம் பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. குரூப் டி-யில் இடம் பெற்றுள்ள வங்கதேச அணி, ஜூன் 8இல் நடைபெறும் முதல் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான நேற்றைய பயிற்சி போட்டியில் அவர் காயமடைந்த நிலையில், ஒரு வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

News June 2, 2024

கருத்துக்கணிப்புகள் போலியானவை: கெஜ்ரிவால்

image

கருத்துக்கணிப்புகள் அனைத்தும் போலியானவை என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கருத்துக்கணிப்பு ஒன்றில், ராஜஸ்தானில் பாஜகவுக்கு 33 இடங்கள் கிடைக்கும் என்று கூறுவதாக தெரிவித்த அவர், அந்த மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதியே 25 இடங்கள் தான் என்றார். தேர்தலுக்கு 3 நாள்கள் முன்பு இந்த கருத்துக்கணிப்புகள் சந்தேகத்தை எழுப்புவதாகவும், தேர்தல் முடிவுகள் மாறாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News June 2, 2024

பாஜக கருத்துக்கணிப்புகளை விட அதிக இடங்கள் பெறும்

image

கருத்துக்கணிப்புகளை விட அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு தேர்தலில் தமிழக மக்கள் அங்கீகாரம் வழங்குவர் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், நாட்டு நலன் கருதி தமாகா பாஜக கூட்டணியிலேயே தொடரும் என உறுதியளித்துள்ளார். கருத்துக்கணிப்புகளில் பாஜக 401 இடங்களை வெல்லும் என கூறப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அவர் கூறியுள்ளார்.

News June 2, 2024

இந்தியாவின் மிக நீளமான சாலை எது தெரியுமா?

image

தேசிய நெடுஞ்சாலை-44 ஸ்ரீநகரில் ஆரம்பித்து, கன்னியாகுமரியில் நிறைவு பெறுகிறது. இதன் தூரம் 3,745 கி.மீ. ஆகும். ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்கள் வழியே செல்கிறது. இந்தியாவின் மிக நீளமான சாலை, உலக அளவில் 22ஆவது பெரிய சாலை என்ற பெருமையை தேசிய நெடுஞ்சாலை-44 பெற்றுள்ளது.

News June 2, 2024

அம்பானியை பின்னுக்கு தள்ளினார் அதானி

image

ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரராக கெளதம் அதானி உருவெடுத்துள்ளார். அதானி குழும பங்குகள் தொடர் ஏற்றத்தை கண்ட நிலையில், அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் மதிப்பை விட உயர்ந்துள்ளது. இந்நிலையில், அதானி 111 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 11ஆவது பெரும் பணக்காரராக மாறியுள்ளார். 11ஆவது இடத்தில் இருந்த அம்பானி, 109 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் தற்போது 12ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

News June 2, 2024

எஸ்கேஎம் கட்சி அபார வெற்றி.. பாஜக, காங்., படுதோல்வி

image

சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களில் எஸ்கேஎம் கட்சி அபார வெற்றிபெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சரான எஸ்கேஎம் கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைகிறது. பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாஜக, காங்., ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

News June 2, 2024

சண்டே கிச்சன் டிப்ஸ்…

image

*சாம்பார் செய்து இறக்குவதற்கு முன், 2 தக்காளியை மிக்சியில் அரைத்து சேர்த்தால் அதிக ருசி கிடைக்கும். *பரோட்டாவிற்கு மாவு பிசையும் போது, அதில் சிறிதளவு மில்க் மெயிட் சேர்க்க சுவையாக இருக்கும். *உளுந்து வடை மாவில் சிறிது நெய் சேர்த்தால் வடை மொறு மொறுப்பாக இருப்பதோடு, அதிக எண்ணெய்யும் செலவாகாது. *பூண்டினை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால், அதன் மேல் தோலை எளிதாக நீக்கலாம்.

News June 2, 2024

காதலியை மணம் முடித்தார் வெங்கடேஷ் ஐயர்

image

ஐபிஎல் மூலமாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர் வெங்கடேஷ் ஐயர். ஐபிஎல் தொடரில் KKR அணியின் ஸ்டார் வீரரான இவருக்கும், அவரது காதலி ஸ்ருதி ரங்கநாதனுக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது, உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், திருமண புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்கள் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News June 2, 2024

தேர்தல் கருத்துக்கணிப்பில் உள்ள சிக்கல்கள்

image

கருத்துக்கணிப்புகளை கொண்டு, தேர்தல் முடிவின் ட்ரெண்டை கணிக்க முடியுமே தவிர, வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையை கணிப்பது சிரமம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்படும் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதாவது, மொத்த வாக்காளர்களில் 0.5%க்கும் குறைவான நபர்களிடமே கருத்துக்கணிப்பு நடத்தப்படுவதால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது.

News June 2, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!