News June 2, 2024

கர்நாடகாவில் காங்கிரஸ் கொடி பறக்கும்: டி.கே.சிவக்குமார்

image

கருத்துக்கணிப்பு முடிவுகள் கர்நாடக மக்களின் முடிவு அல்ல என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் இரட்டை இலக்கத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், காங்கிரஸ் தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக இருக்க வேண்டும் என்றார். கர்நாடகாவில் 20க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

News June 2, 2024

24 மாவட்டங்களில் மழை கொட்டப்போகிறது

image

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) 24 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, சேலம், தருமபுரி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், வேலூர், திருச்சி, நெல்லை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

News June 2, 2024

வாழ்நாள் லட்சியம் நிறைவேறியது: அனிருத்

image

இந்தியன் 1 வெளியான போது தான் கைக்குழந்தையாக இருந்ததாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஷங்கருடன் இணைந்து பணியாற்றுவது தனது வாழ்நாள் லட்சியம் என்ற அவர், இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டே ஷங்கர் தன்னிடம் கேட்டதாகவும் கூறியுள்ளார். அந்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றியுள்ளதை, இசை வெளியீட்டின் போது மக்கள் பார்ப்பார்கள் என்றார்.

News June 2, 2024

நோடல் அதிகாரியின் பணி என்ன?

image

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ஆனி ஜோசப், பொதுத்துறை செயலாளர் நந்தக்குமார் ஆகியோர் நோடல் அதிகாரிகளாக செயல்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நோடல் அதிகாரிகள் தேர்தல் மேற்பார்வையாளர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை எவ்வித தடையுமின்றி தேர்தல் அதிகாரிகள் மூலம் உடனுக்குடன் செயல்படுத்த உதவுவார்கள்.

News June 2, 2024

காந்தியை சிறுமைப்படுத்த மோடி முயல்கிறார்

image

உலக மக்கள் காந்தியை படத்தின் வாயிலாக அறிந்தனர் என்ற மோடியின் பேச்சினை ஏற்க முடியாது என சிபிஎம் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட தோல்வி பயம் காரணமாக, பிரதமர் இவ்வாறு பேசி வருவதாக தெரிவித்த அவர், அதற்கு பரிகாரம் தேடுவதற்காகவே மோடி தமிழகத்தில் தியானம் செய்ததாக கூறியுள்ளார். காந்தியை 1948ஆம் ஆண்டிலேயே உலக மக்களுக்கு தெரியும் என்றார்.

News June 2, 2024

தமிழ்நாட்டில் வரி வருவாய் உயர்வு

image

தமிழ்நாட்டில் கடந்த 2020-21இல் ₹85,606.41 கோடியாக இருந்த மொத்த வரி வசூல், 2023-24இல் ₹1,26,005.92 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 47.19% வரி வசூல் வளர்ச்சியடைந்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர், விருதுநகர் ஆகிய இடங்களில் புதிய நிர்வாகக் கோட்டங்களும், 13 புதிய வணிகவரி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டதால், வரி வசூல் அதிகரிப்பு முக்கிய காரணம்.

News June 2, 2024

வாக்கு எண்ணிக்கை: பொது பார்வையாளர்கள் நியமனம்

image

சென்னையில் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய தொகுதிகளுக்கு, 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு பார்வையாளர்கள் என்ற விகிதத்தில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில், 18 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 2, 2024

ஜூன் 4 வரை வெயிட் பண்ணுங்க: தினகரன்

image

தேர்தலுக்கு பிறகு அதிமுக தலைமையை ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறியுள்ள அவர், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதுகுறித்து விரிவாக பேசலாம் என்றார். அரசியல் கட்சி தலைவர்கள் கோயிலுக்கு செல்வதை பற்றி விமர்சிக்க கூடாது எனவும், தனக்கு மிகுந்த கடவுள் நம்பிக்கை உள்ளதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.

News June 2, 2024

EPFO KYCஐ இனி எளிதாக திருத்தலாம்

image

EPFO பயனாளர்கள் தங்கள் KYCஇல் இருக்கும் தவறுகளை ஆன்லைன் மூலமாக திருத்தம் செய்யலாம் என மத்திய தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, PF பயனாளர் தனது பெயர், பாலினம், ஆதார் எண், பெற்றோரின் பெயர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இனி ஆன்லைனில் எளிதாக திருத்திக் கொள்ள முடியும். ஆனால், தக்க சான்றுகளை பதிவேற்றம் செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 2, 2024

பிரகாஷ் ராஜ் கருத்து சிரிப்பு வர வைக்கிறது: ஜெயக்குமார்

image

இடஒதுக்கீடு குறித்து பிரகாஷ் ராஜ் கூறியது நகைப்பை ஏற்படுத்துவதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வரலாற்றை எண்ணி பார்க்காமல் 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், 69% இடஒதுக்கீட்டை போராடி சட்டமாக்கியவர் ஜெயலலிதா தான் என்றார். முன்னதாக, 69% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் கருணாநிதி தான் என பிரகாஷ் ராஜ் தெரிவித்திருந்தார்.

error: Content is protected !!