News June 2, 2024

இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தவர் கலைஞர்: ஸ்டாலின்

image

கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் திசையை வாழும் காலம் வரை தீர்மானித்தவர் கருணாநிதி என்ற அவர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் அரசுக்கு அடிகோலியவர் என்று தெரிவித்துள்ளார். கருணாநிதி இருந்து செய்து வந்ததை அவரின் மகனாக முன்னெடுத்து செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News June 2, 2024

யுபிஐ வசதியை 20 நாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டம்

image

யுபிஐ பணப்பரிவர்த்தனை வசதியை, 2029ஆம் ஆண்டுக்குள் 20 நாடுகளுக்கு விரிவாக்கம் செய்ய ரிசர்வ் வங்கி மற்றும் NPCI திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு நாடுகளின் மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முன்னதாக, மொரிஷியஸ், இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ வசதியை, அங்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 2, 2024

மோடி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்: முத்தரசன்

image

பிரதமரின் பரப்புரை மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாக சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சாதி, மத ரீதியான பிரச்னைகளை பிரதமர் பேசியதாக கூறிய அவர், இது எதுவும் பயன்பெறாத நிலையில் தானே கடவுள் என மோடி கூறி வருவதாகவும் விமர்சித்தார். வடக்கு, தெற்கு பிரிவினை கருத்துக்களை மோடி பேசியதாகவும், அதற்கு மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் கூறினார்.

News June 2, 2024

பயிற்சியாளர் பதவி: மௌனம் கலைந்த கம்பீர்

image

இந்திய அணிக்கு பயிற்சியாளர் பதவியை ஏற்பது தொடர்பாக கம்பீர் முதல் முறையாக பதிலளித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பு என்பது மிகப்பெரியது என்ற அவர், பயிற்சியாளர் பொறுப்பை தான் மிகவும் நேசிப்பதாகவும் தெரிவித்தார். இந்திய அணி டி20 உலகக் கோப்பையை நிச்சயம் கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News June 2, 2024

நல்ல முதலீடு எப்படி இருக்க வேண்டும்?

image

*நல்ல முதலீடு, பணவீக்கத்தை விட அதிக வருமானம் தருவதாக இருக்க வேண்டும். தற்போது பணவீக்கம் 7%ஆக இருக்கும் சூழலில், நமது முதலீடு அதை விட அதிக வருமானம் அளிக்க வேண்டும். *செபி போன்ற அமைப்பின் கீழ், ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீடாக இருக்க வேண்டும். *குறைவான வருமான வரி கொண்டிருக்க வேண்டும். உதாரணத்திற்கு, பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீடுகளுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் வரை வருமான வரி கிடையாது.

News June 2, 2024

காஜல் அகர்வால் ‘இந்தியன் 2’ படத்தில் இல்லை: ஷங்கர்

image

இந்தியன் 2 படத்தில் கமல் 361 டிகிரி அப்டேடட் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக ஷங்கர் புகழ்ந்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், கமல் கிட்டத்தட்ட 70 நாள்கள் இந்தியன் தாத்தா வேடத்தில் நடித்ததாக கூறினார். விவேக் நம்முடன் இல்லை என வேதனை தெரிவித்துள்ள அவர், இப்படத்திற்கு பின் அவர் நம்முடன்தான் இருப்பார் என்றார். மேலும், காஜல் அகர்வால் 3ஆவது பாகத்தில்தான் வருவார் என கூறியுள்ளார்.

News June 2, 2024

மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தி

image

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தேனி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். எனவே, பொதுமக்கள் மழையின்போது மரத்தடியின் கீழ் நிற்க வேண்டாம். பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கி நிற்கவும். பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லவும். மின் கம்பி அறுந்து கிடந்தால் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News June 2, 2024

கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

image

உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் முடிந்த நிலையில், திகார் சிறையில் சரணடைந்த கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூன் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21இல் கைது செய்யப்பட்ட அவர், மக்களவைத் தேர்தலைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் பெற்றார். அது நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அவர் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 2, 2024

அதிமுக 24 இடங்களில் வெற்றி பெறும்: NewsJ

image

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள நிலையில், NewsJ செய்தி நிறுவனமும் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், திருச்சி, தென்சென்னை, ஈரோடு, நாகை, விருதுநகர், தென்காசி, கரூர், கடலூர், கோவை, சேலம், நாமக்கல், திருப்பூர், காஞ்சி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட 24 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறும் என கூறியுள்ளது.

News June 2, 2024

இந்தியாவுடன் பயமின்றி விளையாடுவோம்: படேல்

image

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், கனடாவை வீழ்த்திய பின் பேட்டியளித்த அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் படேல், அமெரிக்காவில் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு ரசிகர்கள் உள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ரசிகர்களின் ஆதரவோடு தொடர்ந்து சிறப்பாக விளையாடுவோம் எனவும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக களம் கண்டாலும் பயமற்ற விளையாட்டை வெளிப்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!