News June 2, 2024

தேர்தல் ஆணையம் நாளை செய்தியாளர் சந்திப்பு

image

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் நாளை மதியம் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக, தேர்தல் ஆணையம் செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதல்முறை. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு, துணை தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கமாக இருந்துள்ளது.

News June 2, 2024

இஸ்ரேலியர்கள் மாலத்தீவில் நுழைய தடை

image

இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மாலத்தீவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அலி இஹுசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஃபாவில் நடைபெற்ற இஸ்ரேலிய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

News June 2, 2024

அதிமுகவை விட 2 மடங்கு அதிக வாக்கு பெறுகிறதா பாஜக?

image

2024 தேர்தல் தொடர்பான Republic Tv கருத்துக் கணிப்பில் பாஜக 31.9% வாக்குகளும், அதிமுக 16.1% வாக்குகளும் பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அதிமுகவை விட பாஜக 2 மடங்கு அதிக வாக்கு பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் அதிமுக 19.3%, பாஜக 3.6% வாக்குகள் பெற்றிருந்தன. அந்தத் தேர்தலோடு இந்த கருத்து கணிப்பை ஒப்பிட்டால், பாஜக வாக்கு சதவீதம் 10 மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

News June 2, 2024

அரசியல் செய்து வருகிறேன்: பிரகாஷ் ராஜ்

image

மோடியின் பேச்சை மக்கள் மீண்டும் நம்ப மாட்டார்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். தான் அரசியல் செய்து வருவதாக தெரிவித்த அவர், ஒருபோதும் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக செயல்படவில்லை என்றார். பிரதமர் மோடி தனது பணத்தை எடுத்து செலவு செய்திருந்தால், அவர் காந்தியை பற்றி அறிந்திருக்கலாம் என்றும், அதற்கான வாய்ப்பு பிரதமருக்கு வராத காரணத்தில் அவர் காந்தியை அறிந்திருக்க முடியாது எனக் கூறினார்.

News June 2, 2024

கார், ஜீப், வேனுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் ₹125

image

கார், ஜீப், வேன், இலகுரக வாகனம்: ஒருமுறை ₹125, 24 மணி நேரத்தில் திரும்ப ₹185, மாதத்தில் 50 முறை பயன்படுத்த ₹4135, மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வணிக வாகனத்திற்கு ₹60. இலகுரக வணிக வாகனம்: ஒருமுறை ₹200, 24 மணி நேரத்தில் திரும்ப ₹300, மாதம் 50 முறை பயன்படுத்த ₹6,680, மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு ₹100 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News June 2, 2024

சுங்கக்கட்டணம் (2)

image

மூன்று அச்சு கனரகவாகனம் ஒருமுறை ₹460, 24 மணி நேரத்தில் திரும்ப ₹685, மாதம் 50 முறை பயன்படுத்த ₹15,265, மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு ₹330. நான்கு அச்சு முதல் ஆறு அச்சு வரை கனரகவாகனம் ₹660, 24 மணி நேரத்தில் திரும்ப ₹985, மாதத்திற்கு 50 முறை பயன்படுத்த ₹21,940, மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு ₹330. 7 மற்றும் அதற்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனம் ஒருமுறைக்கு ₹800 கட்டணம்.

News June 2, 2024

நள்ளிரவு 12 மணி முதல் சுங்க கட்டணம் அமல்

image

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ரூ.5 முதல் 150 வரை சுங்க கட்டணம் உயர்கிறது. கார், ஜீப், மற்றும் இலகுரக வாகனத்திற்கு (ஒருமுறை) கட்டணம் ₹110, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கான கட்டணம் ₹165, இலகுரக வணிக வாகனத்திற்கு (ஒருமுறை) ₹200, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கான கட்டணம் ₹300 என கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News June 2, 2024

இந்தியாவின் இளமையான முதல்வர் பெமா காண்டு

image

அருணாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெமா காண்டு தலைமையிலான பாஜக, மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 46 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. அருணாச்சலின் தற்போதைய முதல்வர் பெமா காண்டு, இந்தியாவின் இளமையான முதல்வராக அறியப்பட்டவர். 2011இல் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டுவின் மகனான இவர், தந்தைக்கு உதவியாக இருந்து அரசியல் கற்றார்.

News June 2, 2024

சட்டப்பேரவை தேர்தலில் என் கணிப்பு சரியாக இருந்தது

image

கர்நாடகாவில் காங்., 3இல் 2 பங்கு தொகுதிகளில் வெல்லும் என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் காங்., 85 சீட்டுகளை மட்டுமே வெல்லும் என கருத்துக்கணிப்பில் கூறியதாகவும், ஆனால், 136 தொகுதிகளில் வெல்வோம் என தான் உறுதியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். தனது கணிப்பு படி, 135 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைத்ததாக அவர் கூறியுள்ளார்.

News June 2, 2024

பள்ளித்திறப்பு நாளில் ஆதார் இணைப்பு திட்டம்?

image

ஜூன் 6ஆம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் ஆதார் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பள்ளித்திறப்பு ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், பள்ளித் திறப்பு நாளான 10ஆம் தேதி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளைக் கொண்டு, ஆதார் இணைப்பதற்கான முகாம்கள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!