News June 3, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: நட்பியல்
▶அதிகாரம்: பெண்வழிச்சேறல்
▶குறள்: பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும்.
▶பொருள்: ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

News June 3, 2024

பலூன்கள் மூலம் குப்பையை கொட்டிய வட கொரியா

image

வட கொரியா, தென் கொரியா இடையிலான பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், வட கொரியாவுக்கு எதிரான வாசகங்களுடன் தென்கொரியாவில் இருந்து காகிதங்கள் வீசப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு பதிலடியாக, 600க்கும் மேற்பட்ட குப்பை பலூன்களை தென் கொரியாவுக்குள் வட கொரியா பறக்க விட்டு கொட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் கொரிய தீபகற்பத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

News June 3, 2024

கால்பந்து ஜான்பவான் பாய்சங் பூட்டியா தோல்வி

image

சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில், இந்திய கால்பந்து ஜாம்பவான் பாய்சங் பூட்டியா தோல்வியை தழுவினார். 32 தொகுதிகளைக் கொண்ட சிக்கிமில், சிக்கிம் கிராந்திகாரி மோர்சா 31 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், சிக்கிம் ஜனநாயக கட்சி வேட்பாளரான பாய்சங் பூட்டியா 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பாய்சங்பூட்டியா, இந்திய கால்பந்து அணி கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

News June 3, 2024

இந்தியாவுக்கு ஜெர்மனி, நைஜீரியா பாராட்டு

image

நாடாளுமன்றத் தேர்தலை ஜனநாயக முறைப்படி சிறப்பாக நடத்தி முடித்துள்ளதாக, இந்தியாவுக்கு ஜெர்மனி, நைஜீரிய நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன. இது தொடர்பான X பதிவில், இந்தியா உடனான ஒத்துழைப்பை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆவலாக இருப்பதாக ஜெர்மனி கூறியுள்ளது. இதேபோல, ஜனநாயகத்தில் உலகின் கோட்டையாக விளங்கும் இந்தியாவில், தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு வாழ்த்துகள் என நைஜீரியாக தெரிவித்துள்ளது.

News June 3, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News June 3, 2024

அதிக இடங்களில் வெல்வோம்: திண்டுக்கல் சீனிவாசன்

image

கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்பை செய்து வருவதாக கூறியுள்ள அவர், அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் தொகுதியில் முபாரக் வெற்றி பெறுவார் எனவும் கூறினார். நேற்று வெளியான கருத்துக்கணிப்புகளில் அதிமுக 0-2 இடங்களை பெறும் என கூறப்பட்டுள்ளது.

News June 3, 2024

ரஷ்யாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி

image

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளதாக இந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் ஒலெக் அவ்டீவ் தெரிவித்துள்ளார். இளையராஜா பிறந்தநாளையொட்டி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த ஒலெக், அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஷ்யாவின் மிகச்சிறந்த நண்பர் இளையராஜா என புகழாரம் சூட்டிய அவர், ஜூலை மாதம் மாஸ்கோவில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என்றார்.

News June 3, 2024

சுங்க கட்டண உயர்வு அமலானது

image

தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில், சுங்க கட்டணம் ₹5 – ₹150 வரை உயர்ந்தது. கார், ஜீப், மற்றும் இலகுரக வாகனத்திற்கு (ஒருமுறை) கட்டணம் ₹70, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கான கட்டணம் ₹110, இலகுரக வணிக வாகனத்திற்கு (ஒருமுறை) ₹115, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கான கட்டணம் ₹175 என கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News June 3, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News June 3, 2024

WC T20: மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

image

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்: பப்புவா நியூ கினியா நாட்டுக்கு எதிரான போட்டியில் மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய PNG அணி, 136/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக Sese Bau 50 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய WI அணி, 19 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சேஸ் 42, பிரான்டன் கிங் 34 ரன்கள் எடுத்தனர். PNG தரப்பில் ஆசாத் வாலா 2 விக்கெட் வீழ்த்தினார்.

error: Content is protected !!