India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கரூர், ஓசூர், விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் நங்கநல்லூர், பள்ளிக்கரணை, கோடம்பாக்கம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது.
குஜராத் பால் உற்பத்தியாளர் சங்கத் தயாரிப்பு நிறுவனத்தால் அமுல் பால், நாடு முழுவதும் விற்கப்படுகிறது. கடைசியாக 2023 பிப்ரவரி மாதம் பால் விலையை அமுல் உயர்த்தியிருந்தது. இந்நிலையில், அமுல் நிறுவனம் இன்று முதல் பால் விலையை லிட்டருக்கு ₹2 உயர்த்தியுள்ளது. இதன்படி, அமுல் தாசா பால் விலை லிட்டருக்கு ₹2 உயர்ந்து ₹56ஆகவும், அமுல் கோல்ட் விலை லிட்டருக்கு ₹2 அதிகரித்து ₹68ஆகவும் விற்பனையாகிறது.
தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்தும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெயிலின் அளவு, வழக்கத்தைவிட 1-3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக் கூடும்.
மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. முத்தமிழ் அறிஞர் எனப் போற்றப்பட்ட கருணாநிதி, திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் 1924 ஜூன் 3ஆம் தேதி பிறந்தார். சிறு வயது முதலே பொது வாழ்க்கையில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த அவர், தமிழக அரசியல் 5 முறை முதல்வராகவும், களத்தில் 13 முறை MLAவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
*நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளது.
*INDIA கூட்டணியில், ஸ்டாலின், அகிலேஷ், தேஜஸ்வி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர் – மம்தா பானர்ஜி புகழாரம்
*மேற்கு வங்கத்தில் இன்று 2 வாக்குச் சாவடிகளில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
*WC T20 தொடரில் இன்று நமீபியா-ஓமன், தென்னாப்பிரிக்கா-இலங்கை அணிகள் மோதல்.
சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஜூலை 31 வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் ஜூலை 31 வரை லேசர் ஒளி, பலூன்கள் உள்ளிட்ட பொருள்கள் எதையும் பறக்க விடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 6 மணிக்கு நடைபெற உள்ள 3ஆவது லீக் போட்டியில், நமீபியா – ஓமன் அணிகள் மோதுகின்றன. பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. உலகக் கோப்பை T20 தொடரில், இந்த இரு அணிகளும் குரூப் B பிரிவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள 36 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல், ₹5-₹150 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சுங்கக் கட்டண உயர்வால் மளிகை, காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லாரி, சரக்கு வாகனங்கள் ஆகியவற்றின் வாடகை உயரும். இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில், பாஜகவை எதிர்த்து போட்டியிட, 25க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து INDIA கூட்டணியை உருவாக்கின. ஆனால், அந்தக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. முன்னதாக INDIA கூட்டணியில் ராகுல் தான் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் எனத் தகவல்கள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.
INDIA கூட்டணியில், முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ், தேஜஸ்வி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், 2 மாதத்திற்கு முன்பே வீட்டில் தயாரிக்கப்பட்டது என விமர்சித்த அவர், அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை என்றார். மேலும், INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால், CPM தலையிடாதவரை அந்த அரசில் நாங்கள் பங்கேற்க எந்தத் தடையும் இருக்காது என அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.