News June 3, 2024

EVM வாக்குகளுடன் VVPAT சீட்டு எப்படி ஒப்பிடப்படும்?

image

EVM இயந்திரத்தில் தில்லுமுல்லு நடைபெறாமல் உறுதி செய்ய VVPAT முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, EVM-இல் வாக்காளர் தனது வாக்கை பதிவு செய்ததும், VVPAT இயந்திரத்துடன் கூடிய கண்ணாடிப் பெட்டியில் ஒப்புகைச்சீட்டு வரும். இதைப்பார்த்து வாக்காளர் தனது வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா எனத் தெரிந்து கொள்ளலாம். ஒரு தொகுதியில் தோராயமாக 5 VVPAT இயந்திரங்களில் உள்ள சீட்டுகள், EVM வாக்குகளுடன் ஒப்பிடப்படும்.

News June 3, 2024

EXIT POLLS: திமுக தோல்வி அடையும் தொகுதிகள்

image

கடந்த 2 நாள்களாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், தினமலர் நாளிதழின் கருத்துக்கணிப்பு படி, தமிழகத்தில் திமுக 30 தொகுதிகளில் வெல்லும் என்றும், நெல்லை, கோவையில் பாஜக வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், வேலூர், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, தேனி, ராமநாதபுரம், குமரி ஆகிய 7 தொகுதிகளில் இழுபறி நிலவும் என்றும் கணித்துள்ளது.

News June 3, 2024

2019 தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்

image

2019 தேர்தலில் உத்தர பிரதேசத்தின் மசில்சாஹர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிபி சரோஜ் 131 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அவருக்கு 4,88,397 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் திரிபுவன் ராமுக்கு 4,88,216 வாக்குகளும் கிடைத்தன. இதற்கடுத்து லட்சத்தீவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் முகம்மது ஃபைசல், காங்கிரஸ் வேட்பாளரை விட 823 வாக்கு அதிகம் பெற்று வென்றார்.

News June 3, 2024

அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஓமன்

image

டி20 உலகக் கோப்பைத் தொடரின் மூன்றாவது போட்டியில் ஓமன் – நமீபியா நாடுகள் மோதி வருகின்றன. இதில், நமீபியா டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி, 19.4 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அதிகபட்சமாக, கலீத் கைல் 34 ரன்கள் எடுத்தார். நமீபியாவின் டிரம்பிள்மன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

News June 3, 2024

ரேஷன் கடை ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்

image

ரேஷன் கடை அனைத்து ஊழியர்கள் சங்கமான ‘டாக்பியா’ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்கிறது. இருப்பு குறைவிற்கு அபராதத்தை இரு மடங்காக உயர்த்துவது, இயந்திர பழுதுக்கு விற்பனையாளர்களை பொறுப்பாக்குவது போன்றவற்றைக் கண்டித்து இன்று ஒருநாள் ரேஷன் பணியாளர்கள் அனைவரும் விடுப்பு எடுத்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ரேஷன் கடைகள் இன்று இயங்குமா?

News June 3, 2024

கருணாநிதியின் சாதனைகள் (3/3)

image

இலவச டிவி, மகளிர் சுய உதவிக்குழு, பள்ளிகளில் சத்துணவுடன் முட்டை, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகை, அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றை கொண்டு வந்தவர் கருணாநிதி. மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றினார். கை ரிக்‌ஷா முறையை ஒழித்தார். சுதந்திர தினத்தில் முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.

News June 3, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

News June 3, 2024

உச்சம் தொடப் போகும் பங்குச்சந்தை

image

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளதால், பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் கிஃப்ட் நிஃப்டி 600 புள்ளிகள் அதிகரித்து 23,334 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. இதே ட்ரெண்ட் இந்திய பங்குச்சந்தையிலும் இன்று காணப்படும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

News June 3, 2024

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள்

image

தமிழகத்தில் நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 14 மேஜைகள் என 3,300 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் 10,000 பேர், உதவியாளர்கள் 24,000 பேர், நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் என 35,000க்கும் அதிகமானோர் பணியில் ஈடுபடவுள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர்.

News June 3, 2024

நாளை வாக்கு எண்ணிக்கை

image

நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை நடைபெறவுள்ளன. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றன. பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை (4.6.24) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளன. மதியம் 12 மணிக்குள் முன்னிலை நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

error: Content is protected !!