News June 3, 2024

பங்குச்சந்தை புதிய உச்சம்

image

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்திருப்பதால் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 650 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 23,122 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. நிஃப்டி 23,000 புள்ளிகளை கடப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். நாளை தேர்தல் முடிவுகளைப் பொறுத்து பங்குச்சந்தைகளில் ஏற்ற இறக்கம் இருக்கும்.

News June 3, 2024

ஓமன் – நமீபியா போட்டி ‘டை’ ஆனது

image

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று ஓமன், நமீபியா அணிகள் மோதின. இதில், இரண்டு அணிகளும் 109 ரன்கள் எடுத்ததால் போட்டி ‘டை’ ஆனது. இதனால், போட்டி சூப்பர் ஓவருக்குள் நுழைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஓமன், 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய நமீபியா, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்தது.

News June 3, 2024

கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

image

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலின் அவரது நினைவிடத்தில் மரியாதை செய்தார். அவருடன், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். பின்னர், கருணாநிதியின் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். தொடர்ந்து, அண்ணா நினைவிடத்திலும் முதல்வர் மரியாதை செலுத்தினார்.

News June 3, 2024

EXITPOLLS: அதிமுகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது

image

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40.90% வாக்குகளை பெறும் என தினமலர் நாளிதழின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. பாஜக கூட்டணி 25.16% வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றும், 25.07 வாக்குகளுடன் 3வது இடம் பிடிக்கும் என்றும், நாதக 8.74% வாக்குகளுடன் 4ஆவது இடம்பிடிக்கும் எனவும் கணித்துள்ளது.

News June 3, 2024

தபால் வாக்கு என்றால் என்ன? எப்படி எண்ணப்படும்? (1/2)

image

ஆயுதப்படை வீரர்கள், துணை ராணுவ வீரர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர், உடல்நிலை பாதித்தோர், மாற்றுத் திறனாளிகள், 80 வயது முதியோர், தடுப்பு காவலில் இருப்போர், தேர்தல் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள், ரயில்வே, சுகாதார ஊழியர்கள் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க EC அனுமதியளித்துள்ளது. இதற்கு தேர்தல் அதிகாரியிடம் 12 D விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

News June 3, 2024

தபால் வாக்கு என்றால் என்ன? எப்படி எண்ணப்படும்? (2/2)

image

12 D விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, முதியோர் எனில் 2 தேர்தல் அதிகாரிகள் வீட்டுக்கு சென்று, வாக்கு பெறுவர். மற்றவர்களுக்கு தபாலில் வாக்களிக்கும் படிவம், அதை திருப்பி அனுப்பும் உறை அனுப்பி வைக்கப்படும். இதைபெற்று வாக்கைப் பதிவு செய்து கையொப்பமிட்டு, உறையிலுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளில், முதலில் தபால் வாக்குகள் தனியே எண்ணப்பட்டு வேட்பாளர் பெயரில் பதியப்படும்.

News June 3, 2024

தாய் யானை காட்டுக்குள் சென்றது

image

கோவை மருதமலை காட்டுப் பகுதியில் 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த 40 வயது தாய் யானை நலம்பெற்று காட்டுக்குள் சென்றது. 5 நாள்களுக்கு முன் படுத்த படுக்கையாக இருந்த யானையின் அருகே குட்டி யானை சுற்றி வந்ததால், வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முன் வந்தனர். கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டு தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, சிகிச்சை முடித்து கிரேன் உதவியில்லாமல் யானை காட்டுக்குள் சென்றது.

News June 3, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

image

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. விதியை மீறி நாளை மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை பாயும்.

News June 3, 2024

நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால்?

image

யாருக்கும் வாக்களிக்க விரும்பாத மக்களுக்காக EVM இயந்திரத்தில் நோட்டா பொத்தான் இருக்கும். அதில் பதிவு செய்யப்படும் வாக்குகள் நோட்டாவுக்கான வாக்குகளாகக் கருதப்படும். 2013ஆம் ஆண்டு முதல் நோட்டா பயன்படுத்தப்படுகிறது. வேட்பாளர்களை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் என்னவாகும் என கேள்வி எழும். நோட்டாவுக்கு அடுத்து அதிக வாக்கு பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

News June 3, 2024

93 வயதில் 5ஆவது திருமணம்

image

ஊடகத் துறையில் பிரபலமானவர் ரூபெர்ட் முர்டாக் (93). கடந்த ஆண்டு ஃபாக்ஸ் செய்திகளின் நிர்வாகக் குழுவில் இருந்து வெளியேறிய அவர், உயிரியலாளரன எலினா ஜுக்கோவாவை (67) ஐந்தாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவருக்கு ஆன் லெஸ்லி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் ஏற்பட்டு, பின்னர் கடைசி நேரத்தில் திருமணம் ரத்து ஆனது. முன்னதாக திருமணம் செய்த 4 பெண்களையும் முர்டாக் விவாகரத்து செய்துவிட்டார்.

error: Content is protected !!