News June 3, 2024

ODI ஐசிசி விருது பெற்றார் விராட் கோலி

image

2023ஆம் ஆண்டுக்கான சிறந்த ODI வீரர் ஐசிசி விருதை, விராட் கோலி பெற்றுள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக நியூயார்க் சென்றுள்ள அவருக்கு, ஐசிசி நிர்வாகம் விருதை அனுப்பி வைத்துள்ளது. 2023ஆம் ஆண்டில் நடந்த 20 ஒருநாள் போட்டிகளில் 1,377 ரன்கள் குவித்த அவர், சர்வதேச தரவரிசையில் 768 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக சரியாக விளையாடாத அவர், தற்போது கம்பேக் கொடுத்துள்ளார்.

News June 3, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ., மழை

image

கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டம் கரியக்கோவில், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆகிய பகுதிகளில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

News June 3, 2024

விரைவில் ரவி அஷ்வினின் வாழ்க்கை வரலாறு

image

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஹர்பஜன் சிங்கின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியின் தவிர்க்க முடியாத off-break- பவுலராக வலம் வந்தவர் அஷ்வின். டெஸ்ட், ODI, T20 என்று அனைத்து விதமான கிரிக்கெட்களிலும் அசத்தல் சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

News June 3, 2024

வாக்கு எண்ணிக்கையும், படிவங்களும்… (2/2)

image

படிவம் 58 (பகுதி1) – வாக்குச்சாவடியில் உள்ள மொத்த வாக்கும், பதிவான வாக்குகள் விவரமும் இருக்கும். படிவம் 58 (பகுதி-2) – வாக்கு எண்ணிக்கை, முன்னணி, தேர்தல் முடிவு விவரம் இருக்கும். படிவம் 39 – அந்தத் தொகுதியின் கடைசி முடிவு விவரம், நோட்டா உள்பட சாவடியில் பதிவான அனைத்து வாக்குகள் விவரம் இருக்கும். இதில் தேர்தல் ஆணையத்தின் RVO அதிகாரி கையொப்பமிட்டதும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

News June 3, 2024

வாக்கு எண்ணிக்கையும், படிவங்களும்… (1/2)

image

வாக்கு எண்ணிக்கை பணியின்போது பல்வேறு படிவங்கள் பயன்படுத்தப்படும். அதனை தெரிந்து கொள்வோம். 1) படிவம் 21E- வேட்பாளரின் வாக்கு விவரம், வெற்றி விவரம் 2) படிவம் 22- வெற்றி பெறும் வேட்பாளருக்கு RVO அதிகாரியால் அளிக்கப்படும் சான்று. இதை பெறுவோரே எம்எல்ஏ, எம்பியாக அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர் 3) படிவம் 38- வாக்கு எண்ணும் பணி சூப்பர்வைசர், உதவியாளருக்கு அளிக்கப்படும் சான்றிதழ்.

News June 3, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹352 குறைவு

image

கடந்த சில நாள்களாக தொடர்ந்து சரிந்து வரும் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹352 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹53,328க்கும், கிராமுக்கு 44 குறைந்து ₹6,666க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 57,088க்கும், கிராமுக்கு ₹7,136க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ₹97.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News June 3, 2024

NRI வாக்குகள் எப்படி கணக்கிடப்படும்?

image

தேர்தலில் வாக்களிக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு EC அனுமதியளித்துள்ளது. இதற்காக, EC இணையதளம் சென்று 6 A படிவத்தை பூர்த்தி செய்து தபாலிலோ, இணையதளத்திலோ பதிவேற்றலாம். அதை சரிபார்த்து பெயரை வாக்காளர் பட்டியலில் EC சேர்க்கும். இதையடுத்து தேர்தல் நாளில் குறிப்பிட்ட தொகுதியில் உள்ள சாவடியில் நேரில் சென்று வாக்களிக்க வேண்டும். அவரது வாக்கு, பிற வாக்குப் போலவே கணக்கிடப்படும்.

News June 3, 2024

2019 தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்

image

2019 மக்களவைத் தேர்தலில் நவ்சாரி தொகுதியில் பாஜக வேட்பாளர் சிஆர் பாட்டீல், காங்கிரஸ் வேட்பாளர் டிபி பாட்டீலை விட 6.89 லட்சம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இதுவே கடந்த மக்களவைத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும். திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் வேலுசாமி 5.38 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றதே தமிழகத்தில் 2019இல் அதிக வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.

News June 3, 2024

சூப்பர் ஓவரில் நமீபியா த்ரில் வெற்றி

image

ஓமன் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், நமீபியா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் 109 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நமீபியா அணியும், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. அதில், நமீபியா 21 ரன்கள் எடுக்க, ஓமன் 10 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

News June 3, 2024

வெற்றி பெறுவது நிச்சயம்: ஓபிஎஸ்

image

மக்களவைத் தேர்தலில் தன்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர், பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்யவில்லை என்றும், தான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில் தான் உள்ளது எனவும் கூறினார். அத்துடன், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே இயக்கம் அதிமுக உரிமை மீட்புக் குழு எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

error: Content is protected !!