India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் ஆணையம் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தலுக்கு 4 நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஏதாவது ஒரு காரணத்தை கூறி வழக்குப்பதிவு செய்வதா? என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பிய அவர், வாக்கு எண்ணிக்கை தொடர்பான தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்காக நாடே காத்திருக்கிறது. அதில், ஒரு வேளை தேசிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், மாநில கட்சிகளின் கரங்கள் வலுப்படும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மாநில கட்சிகளின் ஆதரவோடு மத்திய அரசு அமையும் பட்சத்தில், அமைச்சரவையில் இடம் கிடைப்பதோடு, மாநிலங்களின் பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என திருமாவளவன் கூறியுள்ளார். தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றிபெறாது என்றார். மேலும், மத்தியில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் INDIA கூட்டணி வெற்றிபெறும் என்றும், INDIA கூட்டணி வெற்றிக்கு திமுகவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமையும் என்றும் கூறினார்.
இந்த விடுமுறையில், பெற்றோர், ஆசிரியர் இணைந்து ‘மின் பாதுகாப்பு’ பற்றி பள்ளி மாணவர்களுக்கு சொல்லித்தர மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கிரிக்கெட் பந்து எடுக்க மாடிக்கு செல்வது, மரத்தில் ஏறுவதை தவிர்க்க வேண்டும். பூங்கா, பொது இடத்தில் விளையாடும்போது, மின் வயர், மின் பெட்டி இருந்தால் அருகில் செல்லவோ, தொடவோ கூடாது என்பதை ஆசிரியர்கள் தங்களது பள்ளி குழுக்களில் அறிவுறுத்தலாம் என தெரிவித்துள்ளது.
விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி முடிந்த பிறகு, ‘பிக் பாஸ் – 8’ தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசனிலும் திரை நட்சத்திரங்கள், வெளிநாட்டு மாடல்கள், சமூக வலைதளப் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கமல் தற்போது ‘தக் லைஃப்’, ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க விரும்புவதாகத் தெரிய வந்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 64.20 கோடி பேர் வாக்களித்து சாதனை படைத்துள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 96.80 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். அதில், ஆண்கள் 49.70 கோடி பேர், பெண்கள் 47.10 கோடி பேர் ஆவர். இத்தேர்தலில் 32.60 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது, ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகைக்கு சற்று ஏறக் குறைய இணையானது ஆகும்.
தனது நீண்ட ஆண்டுகால பொது வாழ்வில் தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக கலைஞர் கருணாநிதி பாடுபட்டதாக, பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். தாங்கள் இருவரும் மாநில முதல்வர்களாக இருந்த போது, அவருடன் தான் நடத்திய உரையாடல்களை நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளார்.
1 கிலோ வெள்ளி கடந்த 29ஆம் தேதி ₹1,02,200ஆக அதிகரித்திருந்தது. ஆனால் கடந்த 5 நாள்களாக அதன் விலை குறைந்து வருகிறது. 30ஆம் தேதி ₹1,01,000ஆகவும், 31ஆம் தேதி ₹1,00,000ஆகவும் குறைந்தது. கடந்த 1ஆம் தேதி ₹98,000 ஆக சரிந்த விலை, நேற்று எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று ₹97,300ஆக சரிவடைந்துள்ளது. அதாவது, கடந்த 5 நாள்களில் ஒரு கிலோ வெள்ளி சுமார் ₹5,000 குறைந்துள்ளது.
டிவி சேனல்களில் நாடக நடிகர்கள், தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர் என கலக்கிய பலர், சினிமாவிலும் சாதித்துள்ளனர். அவர்கள் யார் தெரியுமா? *விவேக் *விஜய் சேதுபதி * மாதவன் *பிரகாஷ் ராஜ் *சமுத்திரக்கனி *நெல்சன் திலிப்குமார் *நயன்தாரா *சிவகார்த்திகேயன் *அட்டக்கத்தி தினேஷ் *சந்தானம் * கவின் *ஐஸ்வர்யா ராஜேஷ் *சாய் பல்லவி *பிரியா பவானி சங்கர் *வாணி போஜன் *மா.கா.பா. ஆனந்த் *சூரி *ரியோ ஆகியோர் ஆவர்.
நாட்டின் சமூக நல்லிணக்கத்தை பாஜக சீர்குலைத்து விட்டதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மக்களை சாதி, மத ரீதியில் பாஜக மோத விடுவதாகக் குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சியில் வினாத்தாள் கசிவு, பழங்குடியினருக்கு எதிராக அத்துமீறல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் சாடினார்.
Sorry, no posts matched your criteria.