News June 3, 2024

கோலி தொடக்க வீரராக விளையாட வேண்டும்

image

ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, உலகக் கோப்பையில் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். ஜெய்ஸ்வாலின் தற்போதைய ஃபார்ம் வருத்தமளிப்பதாகக் கூறிய அவர், கோலி தொடக்க வீரராக ஆடும் பட்சத்தில் ஜெய்ஸ்வால் தனது வாய்ப்புக்காக பொறுமையாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். T20 WCஇல் நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

News June 3, 2024

பாதம் வீக்கமா? இதை செய்யுங்கள் சரியாகிவிடும்

image

பாதத்தின் மேல்பகுதி, கீழ் பகுதியில் ஏற்படும் வீக்கம் தானாக சரியாகிவிடும். ஒருவேளை சரியாகவில்லையெனில், கீழ்காணும் வழிமுறைகளைக் கடைபிடித்தால் சரியாக வாய்ப்புள்ளது. *நாள்தோறும் அதிக நீர் அருந்த வேண்டும் * ஐஸ் பேக் ஒத்தடம் கொடுக்கலாம் *உட்காருகையில், படுக்கையில் கால்களை உயர்த்தி வைக்கலாம் *வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து, பாதத்தை சிறிது நேரம் வைத்தால் வீக்கம் குறையக்கூடும்.

News June 3, 2024

மூன்றாவது குழந்தைக்கு தந்தையானார் SK

image

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று (ஜூன் 2) தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது மனைவியும் குழந்தையும் நலமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், தனது மகள் ஆராதனாவிற்கும், மகன் குகனிற்கும் வழங்கிய அன்பை, தனது மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டும் என ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். மூன்றாவது முறையாக தந்தையான சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News June 3, 2024

7 மணி வரை இடியுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சேலம், கள்ளக்குறிச்சி, கரூர், தேனி, கோவை, நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

News June 3, 2024

தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால்: EX நீதிபதிகள்

image

மக்களவைத் தேர்தலின்போது, சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சு இருந்ததாக குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் அரிபரந்தாமன், அருணா ஜெகதீசன், அக்பர் அலி உள்ளிட்டோர் எழுதிய கடித்ததில் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அரசமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

News June 3, 2024

அறிவார்ந்தவர்கள் இதை நம்பமாட்டார்கள்

image

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் உண்மையில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக வெற்றிபெறும் எனக் கூறப்படும் நிலையில், அச்சடித்ததுபோல அனைவரும் ஒரே மாதிரியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அறிவார்ந்த மக்கள் கருத்துக்கணிப்புகளை நம்ப மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

News June 3, 2024

இந்தியாவின் தங்கம் இங்கிலாந்து சென்றது ஏன்?

image

1990-91 காலகட்டத்தில், ஏற்பட்ட அந்நியச் செலாவணி நெருக்கடியின் போது, இந்தியா தன்னிடம் இருந்த 100.28 டன் தங்கத்தை பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் அடமானம் வைத்து ,401 மில்லியன் டாலர் கடன் வாங்கியது. அந்த கடனை 1991ஆம் ஆண்டு நவம்பர் மாதமே இந்தியா அடைத்து விட்டது. ஆனாலும், போக்குவரத்து மற்றும் வணிக லாபம் போன்ற காரணங்களுக்காக அங்கேயே வைக்கப்பட்டிருந்த தங்கம், தற்போது இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.

News June 3, 2024

BREAKING:தேர்தல் முடிவு அறிவிப்பில் பிரச்னை வருமா?

image

மக்களவைத் தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுவதால், தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி, SC தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். புகார்கள் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக தலையிட தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

News June 3, 2024

ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கை நிராகரிப்பு

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 150 ஆட்சியர்களை தொலைபேசியில் மிரட்டியதாக காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியிருந்தார். தேர்தல் அதிகாரிகளாக ஆட்சியர்கள் இருப்பதால், இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து இன்று மாலைக்குள் விளக்கமளிக்க ஜெய்ராம் ரமேஷுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, அவர் ஒரு வாரம் அவகாசம் கோரியிருந்தார்.

News June 3, 2024

கேதர் ஜாதவ் ஓய்வை அறிவித்தார்

image

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேதர் ஜாதவ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். இதுவரை 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1389 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல்லைப் பொறுத்தவரை CSK, RCB, SRH, DC ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இறுதியாக, 2020இல் நியூசி.,க்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர், அதன்பின் அணியில் வாய்ப்பு கிடைக்காததால் ஓய்வை அறிவித்துள்ளார்.

error: Content is protected !!