News June 3, 2024

போதை பொருள் வழக்கில் நடிகை ஹேமா கைது

image

பெங்களூருவில் நடந்த போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில், தெலுங்கு திரைப்பட நடிகை ஹேமாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பண்ணை வீட்டில் மே 19ஆம் தேதி நடந்த சோதனையில் 150க்கும் மேற்பட்டோர் சிக்கினர். போதை விருந்தில் ஹேமாவும் பங்கேற்றதாக தகவல் வெளியான நிலையில், அவர் அதை மறுத்து வந்தார். அவருக்கு நடத்திய சோதனையில் போதை பொருள் உட்கொண்டது உறுதியானதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.

News June 3, 2024

மூத்த தலைவர்களுக்கு காங்., அழைப்பு

image

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், INDIA கூட்டணியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நாளை மறுநாள் வரை டெல்லியில் தங்கியிருக்க காங்., அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் முடிவுக்குப் பின் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், முடிவில் குளறுபடி இருந்தால் குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேவை ஏற்பட்டால் ஆர்ப்பாட்டம் நடத்த தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News June 3, 2024

T20 WC பரிசுத் தொகை அறிவிப்பு

image

T20 உலகக் கோப்பைக்காக மொத்தம் ₹93,51,23,062 கோடி பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் வெற்றிபெறும் அணிக்கு ₹20.3 கோடியும், 2ஆம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ₹10.6 கோடியும் பரிசாக வழங்கப்படும். அரையிறுதியில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா ₹6.5 கோடி, இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா ₹3.1 கோடி, 9 -12ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.

News June 3, 2024

கேசவ விநாயகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

image

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில், நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடையவர்கள் ₹4 கோடி எடுத்து சென்ற போது பிடிபட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்துக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த சம்மனை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

News June 3, 2024

“டாஸ்மாக் கடைகளை முன்கூட்டியே மூடுங்க”

image

வாக்கு எண்ணிக்கையையொட்டி, நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சிலர் முன்னதாகவே மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்க முயற்சிக்கின்றனர். பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் டாஸ்மாக்கில் தனி நபருக்கு அதிகளவில் மதுபாட்டில் விற்கக்கூடாது. இன்று இரவு 10 மணிக்கு பதில் முன்னதாகவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

News June 3, 2024

₹7,755 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் திரும்பவில்லை

image

7,755 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மே 2024 கணக்கீடு படி, மொத்த 2,000 ரூபாய் தாள்களில் 97.82% நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ளது. வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றுவதற்கான கால அளவு முடிந்து 8 மாதங்களான நிலையில், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

News June 3, 2024

120 ஆண்டுகளில் இல்லாத வெயில்

image

வட இந்தியாவில் 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு கடுமையான வெயில் வாட்டி வதைத்துள்ளதாக, ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வழக்கமாக 47 டிகிரி செல்சியஸை தாண்டாத வெயில், இம்முறை 52 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது. இதன் எதிரொலியாக, Heatstroke ஏற்பட்டு ஒடிஷாவில் 99 பேரும், உத்தர பிரதேசத்தில் தேர்தல் பணியாளர்கள் 33 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், டெல்லியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

News June 3, 2024

image

https://d29i5havsxvi1j.cloudfront.net/cd-timer/exitpolls-cd-timer.html

News June 3, 2024

உடனுக்குடன் தபால் வாக்குகள் முடிவுகள் : சாகு

image

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டும் என மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்று எண்ணிக்கைக்கு முன், தபால் வாக்கு எண்ணிக்கையின் மொத்த விவரங்கள் வெளியாகும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதியுடன் முடிவுபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

News June 3, 2024

தேர்தல் ஆணையத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

image

தபால் வாக்குகள் தொடர்பான ஆந்திர தேர்தல் அதிகாரியின் சுற்றறிக்கையை எதிர்த்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தபால் வாக்கு படிவத்தில் சான்றளிக்கும் அதிகாரியின் பதவி குறிப்பிடாமல், கையொப்பம் மட்டும் இருந்தாலே, அந்த வாக்கு செல்லும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இது மோசடிக்கு வித்திடும் என ஒய்எஸ்ஆர் காங்., வழக்கு தொடுத்திருந்தது.

error: Content is protected !!