News June 3, 2024

பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வாட்ஸ்அப்

image

விதிகளை மீறியதாக இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் 71 லட்சம் கணக்குகளை Whatsapp நிறுவனம் முடக்கியுள்ளது. மோசடி செயல்களைத் தடுக்கும் வகையில் மாதந்தோறும் முறைகேடுகளில் ஈடுபடுவோரின் Whatsapp கணக்குகளை அந்நிறுவனம் முடக்கி வருகிறது. அந்த வகையில், பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், விதிகளை மீறுவோரின் கணக்குகள் முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

News June 3, 2024

வாக்கு இயந்திரங்களின் எண்கள் மாற்றம்: காங்கிரஸ்

image

ராஜ்நந்த்கான் தொகுதியில் பல மையங்களில் வாக்கு இயந்திரங்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், அத்தொகுதியின் காங்., வேட்பாளருமான பூபேஷ் பாகேல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 17சி படிவத்துடன் ஒப்பிடும் போது, வாக்கு இயந்திரங்களில் எண்கள் மாறியுள்ளதாகவும், தேர்தல் முடிவில் ஏற்படக் கூடிய தாக்கத்துக்கு யார் பொறுப்பு? எனவும், அவர் தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

News June 3, 2024

HDFC வங்கி சேவைகள் 2 மணி நேரம் நிறுத்தம்

image

HDFC வங்கி சேவைகளை இன்று நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை பயன்படுத்த முடியாது என வாடிக்கையாளர்களுக்கு HDFC குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் பேங்கிங், ஏடிஎம், POS ஆகிய சேவைகளை 2 மணி நேரம் நிறுத்தி வைப்பதாக HDFC அறிவித்துள்ளது. அதிகாலை 2.30 மணியில் இருந்து அனைத்து சேவைகளும் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

News June 3, 2024

வெற்றிக்காக காத்திருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள் (1/3)

image

வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், ஸ்டார் வேட்பாளர்களின் நிலவரம் குறித்து அறிய தமிழ்நாட்டு மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அந்த வகையில், தென் சென்னையில் பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன், திமுக சார்பில் சிட்டிங் எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகின்றனர். கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் தேர்தல் முடிவு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

News June 3, 2024

வெற்றிக்காக காத்திருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள் (2/3)

image

சிதம்பரம் தொகுதியில், கடந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற விசிக தலைவர் திருமாவளவன் இம்முறை அதே தொகுதியில் களம் கண்டுள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் சுயேச்சையாக களமிறங்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் முடிவு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. நெல்லையில் பாஜக சார்பில் களம் கண்ட நயினார் நாகேந்திரனின் தேர்தல் முடிவு கவனம் பெறும்.

News June 3, 2024

வெற்றிக்காக காத்திருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள் (3/3)

image

விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரின் தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. தேனி தொகுதியில் அமமுக வேட்பாளர் தினகரன், தருமபுரியில் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி களம் கண்டுள்ளனர். அதே போல, தூத்துக்குடியின் சிட்டிங் எம்.பி கனிமொழி, நீலகிரி தொகுதியில் 3 முறை தொடர்ந்து வென்ற ஆ.ராசா ஆகியோரின் தேர்தல் முடிவுகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

News June 3, 2024

எவ்வளவு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது தெரியுமா?

image

இந்தியாவில் எவ்வளவு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது என்பதை அறிய பலரும் ஆர்வமுடன் இருக்கின்றனர். அதாவது, நாட்டில் அதிகபட்சமாக ₹500 நோட்டுகள் 86.7% புழக்கத்தில் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக ₹100 நோட்டுகள் 5.9%, ₹200 நோட்டுகள் 4.4%, ₹50 நோட்டுகள் 1.3%, ₹20 நோட்டுகள் 0.8%, ₹10 நோட்டுகள் 0.7%, ₹5 நோட்டுகள் 0.1% ₹2 நோட்டுகள் 0.1% புழக்கத்தில் உள்ளன.

News June 3, 2024

T20 WC: 77 ரன்களில் சுருண்ட இலங்கை

image

T20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 77 ரன்களில் சுருண்டுள்ளது. SA அணி பவுலர்களின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து, 19.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. SA தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நோர்க்யா 4, ரபாடா 2, மகாராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

News June 3, 2024

இந்தியாவுக்கு சுற்றுலா செல்லுங்கள்: இஸ்ரேல்

image

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய கடற்கரைகளில் இஸ்ரேலியர்கள் தங்கள் சுற்றுலா விடுமுறையை கழிக்குமாறு, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இந்தியாவின் பிரசித்தி பெற்ற கடற்கரைகளான கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு மற்றும் கேரளா உள்ளிட்டவற்றை தனது X பக்கத்தில் பரிந்துரைத்துள்ளது.

News June 3, 2024

இரவில் தான் அண்ணாமலை தொகுதியின் முடிவு தெரியும்

image

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நட்சத்திர தொகுதியான கோவை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. மொத்தம் 24 சுற்றுகள், ஒரு சுற்றுக்கு 25 நிமிடங்களாகும் என்பதால், உத்தேசமாக வாக்கு எண்ணிக்கையை முடிக்க 12 மணி நேரம் தேவைப்படும். முன்னணி நிலவரம் மதியம் 2 மணிக்கு தெரியவரும் என்றாலும், முழுமைமையான முடிவு வெளியாக இரவு 8.30 மணியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!