India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிறையில் ஏர் கூலர் வழங்கவில்லை என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பேசிய டெல்லி அமைச்சர் அதிஷி, பாஜகவின் போலி வழக்கால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், திகார் சிறையில் மீண்டும் சரணடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் 50 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மோசமான குற்றவாளிகளுக்கு கூட கூலர் வழங்கும் போது, கெஜ்ரிவாலுக்கு வழங்கவில்லை என்றார்.
நடப்பு ஆண்டில் நடத்தப்பட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை, மீண்டும் புதிதாக நடத்தக்கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து மனு அளிக்கப்பட்டுள்ளது. 2024 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள், ஜூன் 14ல் எதிர்பார்க்கப்படும் நிலையில் மாணவர்கள் வலியுறுத்தல்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணி தயார் நிலையில் உள்ளதாகவும், இதற்காக பயிற்சி பெற்ற 40,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும், பின்னர் இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 77 ரன்கள் மட்டுமே எடுத்து. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லையென்றாலும், டி காக் (20), க்ளாஸன் (19) பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர்.
மேஷம் – குழப்பம் ஏற்படும் * ரிஷபம் – பண வரவு உண்டாகும்* மிதுனம் – புகழ் கிடைக்கும் * கடகம் – சாந்தம் உண்டாகும் *சிம்மம் – பக்தி உண்டாகும் * கன்னி – மனஉறுதியுடன் செயல்படுங்கள் * துலாம் – வீண் அலைச்சல் ஏற்படும் * விருச்சிகம் – கடும் போட்டி நிலவும் * தனுசு – பொறுமையாக இருங்கள் * மகரம் – பல்வேறு தடைகள் ஏற்படும் * கும்பம் – பாராட்டுகள் குவியும் * மீனம் – பணம் வரவு கிடைக்கும்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர், இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில், இத்தேர்தலில் வெற்றிபெற்று பாஜக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகும் பட்சத்தில், நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் இல்லத்தில் இருந்து பாஜக அலுவலகம் வரை தொண்டர்கள் புடைசூழ வெற்றிப்பேரணி செல்ல மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி, சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இல்லாவிட்டாலும், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது பதிவிட்டுள்ள அவர், X தளத்தில் தனது பெயரில் போலியான கணக்கு இருப்பதாகவும், அதை தயவு செய்து யாரும் பின் தொடர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த போலி கணக்கை சுமார் 80 ஆயிரம் பேர் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் இந்தியாவின் ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதற்கான சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடிக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் மோடியை நிதிஷ் குமார் திடீரென சந்தித்து பேசினார். இந்நிலையில், தேர்தல் நேர கிளர்ச்சியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என அவர் எச்சரித்ததாக தெரிகிறது.
நாளை இந்தியாவின் தலைவிதியை மாற்றப்போகும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு காங்., தலைவர் கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணும் நாளில் யாருக்கும் பயப்பட வேண்டாம், அச்சமின்றி தங்கள் கடமையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, நாட்டுக்காக தங்களது சேவையை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
97 கோடி வாக்காளர்கள், 55 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 10.5 லட்சம் வாக்குச் சாவடிகள், 8,360 வேட்பாளர்களுடன் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 543 தொகுதிகளுக்கான முடிவுகள் நாளை வெளியாகவுள்ளது. பல்வேறு கருத்துக்கணிப்புகளை கடந்து, மக்களின் உண்மையான ஒரு விரல் புரட்சி நாளை தெரிய வரவுள்ளது. பாஜக, காங்கிரஸ் எத்தனை தொகுதிகளை வெல்லும் என நீங்கள் கணிக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்.
Sorry, no posts matched your criteria.