News June 4, 2024

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு அரிய வகை நோய்

image

பிசிஓஎஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்த பிரச்னையால் தன்னால் வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை என்றும், வேதனைகளை பொறுத்துக்கொண்டு படங்களில் சண்டை காட்சிகள், பாடல் காட்சிகளில் சிரித்தபடி நடித்து வருவதாகவும் கூறினார். இதனால் பல பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இல்லாமல் போவதாகவும் குறிப்பிட்டார்.

News June 4, 2024

10ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு

image

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், இன்று பிற்பகல் 3 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வக இயக்ககம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து நகலினைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு நாளை முதல் 6ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

News June 4, 2024

அப்துல் கலாம் பொன்மொழிகள்

image

✍பிரபஞ்சத்தை விட அபார சக்தி கொண்டது உன் மூளை. பிறகென்ன கவலை? ✍நல்ல எண்ணங்கள் வளர, வளர உள்ளத்தில் வலுவான சக்திகள் உருவாகும். ✍நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. ✍சாவி இல்லாத பூட்டு இருக்காது. அதுபோல், தீர்வு இல்லாத பிரச்னையும் இருக்காது. ✍உங்கள் பழக்கவழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தையே மாற்றும். ✍சுறுசுறுப்பாக இருங்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.

News June 4, 2024

வாக்கு எண்ணிக்கை: 3 அடுக்கு பாதுகாப்பு

image

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில், அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகார அட்டை வழங்கப்பட்ட பணியாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையத்திற்குள், பத்திரிகையாளர்களுக்கு தொலைபேசி உபயோகிக்க அனுமதி கிடையாது. இவர்களை சீர் செய்வதற்காக, கம்புகளால் வரிசைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் மற்றும் நகரும் கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

News June 4, 2024

39 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

image

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி, 39 மையங்களில் நடைபெற உள்ளன. இந்த மையங்களில் 1 சட்டமன்ற தொகுதிக்கு 1 அறை வீதம், 234 அறைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் வீதம், 3,300 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும். தேவையான இடங்களில் 14க்கும் அதிகமான மேஜைகள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுற்று வாரியாக வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்படும்.

News June 4, 2024

ஜூன் 4: வரலாற்றில் இன்று

image

1919 – பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டத்துக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது.
1920 – ஹங்கேரி தனது 71% நிலத்தையும், 63% மக்களையும் இழந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: டைனமோ நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: மிட்வே தீவுகள் மீது ஜப்பான் தாக்குதலை தொடங்கியது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ரோம் நகரம் நேச நாடுகளிடம் வீழ்ந்தது.
1970 – ‘தொங்கா’ பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது.

News June 4, 2024

வீட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட கருத்து கணிப்புகள்

image

மக்களவைத் தேர்தலின் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை, மம்தா பானர்ஜி காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கருத்துக் கணிப்பு முடிவுகள், ஊடக நிறுவனங்கள் தங்களது ஆதாயத்திற்காக 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபடி தயாரிக்கப்பட்டவை. இதற்கு எவ்வித மதிப்பும் இல்லை. 2016, 2021 சட்டப்பேரவை கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ன ஆனது என்பதை நாம் பார்த்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

News June 4, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 139
▶குறள்: ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
▶பொருள்: தெரியாமல் கூட நம் வாயால் தகாத வார்த்தைகளை சொல்ல கூடாது. து, ஒழுக்கம் உடையவர்களின் பண்பு இல்லை.

News June 4, 2024

உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும்

image

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் உடனே தலையிட வேண்டும் என ஜனாதிபதி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், தேர்தலில் பாஜக அரசு தோல்வியடைந்தால் ஆட்சி மாற்றம் சுமுகமாக இருக்காது. சட்ட விதிகளுக்கு எதிரான செயல்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை சுமுகமாக வெகுளிஃ

News June 4, 2024

ஒடிஷா மாநில அரசு கலைப்பு

image

இன்று ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு, சட்டசபை தேர்தலின் வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. இதனையொட்டி அம்மாநிலத்தின் சட்டசபையை கலைக்க கவர்னருக்கு அம்மாநில அமைச்சரவை பரிந்துரை செய்தது. அதன்படி ஆளுநர் ரகுபர் தாஸ் நவீன் பட்நாயக் தலைமையிலான சட்டசபையை கலைத்து நேற்றிரவு உத்தரவிட்டார். நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு கடந்த 2019ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!