India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலோடு, ஒடிஷா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகிறது. ஆந்திராவில் 175 தொகுதிகளிலும், ஒடிஷாவில் 147 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் மோதுகின்றன. ஒடிஷாவில் பிஜு ஜனதா தளம், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இலங்கையில் நடைபெற்று வந்த ‘G.O.A.T’ படப்பிடிப்பு, நிறைவடைந்துவிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் வெளியாவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று, படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இத்தேர்தலே அடுத்து மத்தியில் ஆட்சியமைக்க போவது யார் என்பதை தீர்மானிக்கும் என்பதால், இந்த வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் முன்னணி நிலவரம், இறுதிக்கட்ட முடிவு உள்பட அனைத்து விவரங்களும் உடனுக்குடன், சிறப்பு விளக்கப்படங்களுடன் WAY2NEWSஇல் மிகத் துல்லியமாக வெளியிடப்படவுள்ளது.
▶மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது
▶மக்களவைத் தேர்தலில் 64 கோடியே 20 லட்சம் பேர் வாக்கு செலுத்தி புதிய சாதனை
▶+1, +2 துணைத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியானது
▶ தபால் வாக்குகள் தான் முதலில் எண்ணப்படும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
▶வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
▶T20 WC: தென்னாப்பிரிக்கா வெற்றி
▶தேர்தல் அலுவலர் முன்னிலையில் தபால் வாக்குச் எண்ணும் பணி தொடங்கப்படும். ▶எண்ணும் பணி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, பெறப்பட்ட தபால் வாக்குகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். ▶எண்ணும் பணி தொடங்கி 30 நிமிடங்களுக்குப் பிறகு, மின்னணு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படும். ▶தபால் வாக்குகள் இல்லை என்றால், மின்னணு வாக்குகளை எண்ணும் பணியை திட்டமிட்ட நேரத்தில் தொடங்கலாம்.
ஆப்கானிஸ்தான் – உகண்டா இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி, இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதில், டாஸ் வென்ற உகாண்டா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் முதல்முறையாக டி20 போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளதால், யார் வெற்றி பெறுவார்? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். போட்டியை டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் நேரலையில் காணலாம்.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாள்களுக்கு (ஜூன் 9 வரை) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டிய வடதமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், நாளை நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா & மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில், இன்று 3 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் (காலை 6 மணிக்கு), ஆப்கானிஸ்தான்-உகாண்டா அணிகளும், 2ஆவது போட்டியில் (இரவு 8 மணிக்கு), இங்கிலாந்து- ஸ்காட்லாந்து அணிகளும், 3ஆவது போட்டியில் (இரவு 9 மணிக்கு), நேபாளம் – நெதர்லாந்து அணிகளும் மோதவுள்ளன. போட்டிகளை ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம்.
▶ஜூன் – 4, வைகாசி – 22 ▶கிழமை – செவ்வாய்
▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM, 4:30 PM – 5:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 7:30 PM – 8:30 PM
▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM
▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM
▶குளிகை நேரம்: 12:00 PM – 1:30 PM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶திதி: த்ரயோதசி
▶நட்சத்திரம்: 10:35 PM வரை பரணி பிறகு கார்த்திகை
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உறுதியளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு சுற்றுக்கும் வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் எந்தவிதமான பிரச்னைகளும், ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.