India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் திறக்கப்படும். ▶பதிவான வாக்குகளின் அடிப்படையில், 7 – 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ▶வாக்கு எண்ணும் முகவர்கள் பணி முடிந்து முடிவு வரும் வரை வெளியே செல்ல கூடாது. ▶1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். ▶மத்திய ஆயுதக்காவல் படைகளைச் சேர்ந்த 15 அமைப்புகளிலிருந்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இன்று பிறந்த நாள் ஆகும். இந்நாளில் அவர் போட்டியிடும் கோவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. அவரை எதிர்த்து திமுகவின் கணபதி ராஜ்குமாரும், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர். அவர்களை அண்ணாமலை வீழ்த்துவாரா? பிறந்த நாள் பரிசாக கோவை வெற்றியை அண்ணாமலைக்கு மக்கள் அளிப்பார்களா? என்பது இன்று பிற்பகலுக்குள் தெரிய வரும்.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும். அதன்பின், 8.30 மணியளவில் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கும். களத்தில் திமுக +, அதிமுக +, பாஜக +, நாதக என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மதியத்திற்கு மேல் தெரிய வரும்.
மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் பதிவான வாக்குகள் இன்னும் சற்று நேரத்தில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முகவர்கள் செல்ஃபோன் கொண்டுவரக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். இதனால், பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதால், அதற்கான சான்று அளிக்கப்பட்டது. இந்நிலையில், குஜராத்தில் மீதமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகிறது.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் சற்று நேரத்தில் எண்ணப்படுகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ள நிலையில், NEWS J நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக 24 இடங்கள் வரை வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மக்கள் தீர்ப்பு என்ன என்பதை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்கும் ஆற்றல் பிரத்யங்கரா தேவியின் குங்குமத்திற்கு உண்டாம். ஸ்ரீ பிரத்யங்கிரா காயத்ரியை சொல்லி நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.
மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் போட்டியிடுகிறார். இதில் ரேபரேலி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். அந்தத் தொகுதியில், ராகுலின் தாத்தா பெரோஸ் காந்தி 1952, 1957 தேர்தல்கள், பாட்டி இந்திரா காந்தி 1967,1971, 1980 தேர்தல்களில் வென்றுள்ளனர். ராகுலின் தாயார் சோனியா 2004- 2019 வரை வென்றுள்ளார். இத்தொகுதியை ராகுல் இம்முறை தக்க வைப்பாரா? என்பது இன்று தெரிந்து விடும்.
வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அரசு ஊழியர்கள், முகவர்கள் செல்ஃபோன், ஸ்மார்ட் வாட்ச், நெக் பேண்ட் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவப்படையினர் செல்ஃபோன் எடுத்து சென்றதற்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், துணை ராணுவப் படையினரை நுழைவு வாயிலில் இருந்து காவலர்கள் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.