News June 4, 2024

தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

image

மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில், தபால் வாக்குகள் செலுத்தப்பட்ட பெட்டிகளின் சீல் அகற்றப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து, EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தபால் வாக்குகள் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை எண்ணப்படுவது, குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

டி.ஆர்.பாலு காருக்கு அனுமதி மறுப்பு

image

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று கலை 8 மணிக்கு தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல முயன்ற நிலையில், அங்கிருந்த அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். காருடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறியதால், திமுகவினர் அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சலசலப்பு நிலவி வருகிறது.

News June 4, 2024

வாகை சூடப்போவது யார்? (2/2)

image

இந்த ஜனநாயகப் போரில் வெற்றியாளரை தீர்மானிக்கும் நடுவர்களாக 64 கோடி இந்திய மக்களும் 7 கட்ட வாக்குப் பதிவில் ஆட்காட்டி விரல் மூலம் தங்களது விருப்பத்தை தெரிவித்துவிட்டனர். அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவை ஆளப்போவது யார்? வெற்றி வாகை சூடப்போவது யார்? பாஜக தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணியா? 37 எதிர்க்கட்சிகளின் தலைமையிலான INDIA கூட்டணியா? என்பதை இன்று நடக்கும் ஓட்டு எண்ணிக்கை துல்லியமாக விடை சொல்லிவிடும்.

News June 4, 2024

தமிழகத்தில் வலுவாக காலூன்றுமா பாஜக?

image

தேர்தலில் பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் பாஜக போட்டியிட்டது. இதில் அண்ணாமலை, எல். முருகன், தமிழிசை, ராதிகா சரத்குமார், பொன் ராதா கிருஷ்ணன் போட்டியிடும் 5 தொகுதிகளில் வெற்றி உறுதி என அக்கட்சி நம்புகிறது. அவ்வாறு பாஜக வெற்றி பெற்றால், அது தமிழகத்தில் பாஜகவின் தனிப்பெரும் சாதனையாக கருதப்படும். பாஜகவின் கணிப்பு பலிக்குமா? இல்லையா? என்பது இன்று தெரிந்து விடும்.

News June 4, 2024

பாஜக 300 இடங்களை தாண்டினால்…

image

பாஜக கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் வென்றால், அது மக்கள் அளித்த வாக்காக இருக்க வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். போபாலில் பேசிய அவர், “தேர்தலில் INDIA கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும். அதுதான் மக்கள் அளித்த தீர்ப்பு. பாஜக வெல்ல வாய்ப்பே இல்லை. ஒருவேளை பாஜக வென்றால், அது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செலுத்திய வாக்காகத்தான் இருக்கும்” என்றார் .

News June 4, 2024

NDA- 343, INDIA – 200.. சூதாட்டக்காரர்கள் கணிப்பு

image

நாடு முழுவதும் 2 வாரங்களுக்கு முன்பே மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பான சூதாட்ட சந்தை தொடங்கிவிட்டது. குறிப்பாக, டெல்லியில் உள்ள சூதாட்டக்காரர்கள் பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு 341- 343 இடங்கள் கிடைக்கும் என்றும் INDIA கூட்டணிக்கு 198 முதல் 200 இடங்கள் கிடைக்கும் என்றும் கணித்துள்ளனர். பாஜக தனியாக 310-313 இடங்களிலும், காங். தனியாக 57-59 இடங்களிலும் வெற்றி பெறும் என அவர்கள் கணித்துள்ளனர்.

News June 4, 2024

நீலகிரி தொகுதி யாருக்கு சாதகம்?

image

கோவை, திருப்பூர் உள்பட 4 மாவட்டங்களை உள்ளடக்கிய நீலகிரி தொகுதியில், ஆ.ராசா சிட்டிங் எம்.பியாக இருக்கிறார். திமுக சார்பில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் களம் கண்டனர். 8 முறை காங்., 3 முறை திமுக வென்ற இத்தொகுதியில் அதிமுக, பாஜக தலா 2 முறை வென்றுள்ளன. இத்தொகுதி, இம்முறையும் ஆ.ராசாவுக்கு சாதகமாகவே இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

News June 4, 2024

விளவங்கோட்டில் வெற்றியைத் தக்கவைக்குமா காங்.,?

image

மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எனப்படுகின்றன. இத்தொகுதியில், 3 முறை MLA.,வாக இருந்த விஜயதாரணி (காங்.,) பாஜகவில் இணைந்ததையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மக்களவைத் தேர்தலுடன் இத்தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், காங்., வெற்றியைத் தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

News June 4, 2024

வாக்கு எண்ணும் முறை (3)

image

▶வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். ▶EVM-இன் சீல் அகற்றம், VVPAT எந்திரத்தில் பதிவான வாக்குகளில் வேறுபாடு இருந்தால் எண்ணிக்கை நிறுத்தப்படும். ▶VVPAT எந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்த்து மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். ▶வெற்றி மற்றும் முன்னிலை தொடர்பான தகவல்களை results.eci.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

News June 4, 2024

வாக்கு எண்ணும் முறை (2)

image

▶வாக்குப்பதிவு நேரம், எந்திரத்தின் தனி அடையாள எண் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சி முகவர்கள் சரி பார்ப்பார்கள். ▶எந்திரத்தில் பதிவான வாக்குகளும், 17-சி படிவத்தில் உள்ள பதிவு விவரங்களும் சரி பார்க்கப்படும். ▶காலை 8.30 மணிக்கு மின்னனு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். ▶ஒவ்வொரு மேஜையில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைகளும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும்.

error: Content is protected !!