India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை தொகுதியில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார். மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் செலுத்திய தபால் வாக்குகளில், பெரும்பாலானோர் திமுகவிற்கு ஆதரவு அளித்துள்ளனர். கடந்த காலங்களை போல, தற்போதும் தபால் வாக்குகளில் திமுக ஆதிக்கம் செலுத்துகிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் 50% ஆண்கள், 50% பெண்களை களமிறக்கும் அந்தக் கட்சி, இந்தத் தேர்தலிலும் அதே பாணியை பின்பற்றியுள்ளது. குறிப்பாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 20 ஆண்கள், 20 பெண்கள் களத்தில் உள்ளனர். இதனிடையே, கடந்த தேர்தல்களில் NTK-வின் வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்திருப்பது, குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் நல்லதம்பி 2ஆவது இடத்தில் உள்ளார்.
குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு அவரை எதிர்த்து சோனல் படேல் களம் கண்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அமித் ஷா முன்னிலை வகித்து வருகிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆந்திர சட்டசபைத் தேர்தலில் YSR காங்., தலைவர் ஜெகன் மோகன் புலிவெந்துலா (கடப்பா) தொகுதியில் 1,32,356 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சதிஷ் ரெட்டியைக் (42,246) காட்டிலும் ஜெகன் 90,110 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். கடந்த தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குகள் வித்தியாசம் இதுவே ஆகும். ஜெகனின் இந்த சாதனை இந்தத் தேர்தலில் முறியடிக்கப்படுமா?
உ.பி முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கன்னாஜ் தொகுதியில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் சுப்ரத் பதக் 2ஆவது இடத்தில் இருந்து வருகிறார். பி.எஸ்.பி வேட்பாளர் இம்ரான் பின் ஜாபர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார், வேட்பாளர்களின் முகவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்களை போலீசார் சோதனைக்கு உட்படுத்திய போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாகக் கூறி போலீசாருடன் கட்சிகளின் முகவர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர். 800க்கும் மேற்பட்ட முகவர்களை ஒரே நேரத்தில் அனுமதித்ததால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக மற்றும் பாஜக வேட்பாளர்களின் முகவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தால், வாக்கு எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை தலையீட்டு இருதரப்பையும் சமாதானம் செய்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளரான கனிமொழி முன்னிலையில் இருக்கிறார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.