News June 4, 2024

பஞ்சாப்பில் காங்கிரஸ் முன்னிலை

image

பஞ்சாப்பில் மொத்தமுள்ள 13 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 13 தொகுதியிலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

News June 4, 2024

ஜோதிமணி முன்னிலை

image

கரூர் மக்களவைத் தொகுதி தபால் வாக்குகள் எண்ணும் பணி உறுதிமொழியுடன் துவங்கியது. மொத்தம் பதிவான தபால் வாக்குகள் 7708, 8 மேஜைகளில், ஒரு சுற்றுக்கு 500 வாக்குகள் வீதத்தில் எண்ணுவதற்கான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்., வேட்பாளர் ஜோதிமணி முன்னிலையில் இருக்கிறார்.

News June 4, 2024

சந்திரபாபு நாயுடு முன்னிலை

image

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான சந்திரபாபு நாயுடு 1,549 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்க உள்ளது.

News June 4, 2024

தென் சென்னையில் வாக்கு எண்ணிக்கை தாமதம்

image

தமிழகம் முழுவதும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தென் சென்னை தொகுதியில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தாமதமாக தொடங்கியுள்ளது. சரியாக காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய வாக்கு எண்ணும் பணி, 18 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியுள்ளது. தென் சென்னை தொகுதியில் திமுக – தமிழச்சி, பாஜக – தமிழிசை, அதிமுக – ஜெயவர்தன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

News June 4, 2024

டெல்லியில் 2 தொகுதிகளில் பாஜக முன்னிலை

image

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்படுவதால் முன்னிலை நிலவரம் மட்டுமே வெளியாகி வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் இறுதிக்கட்ட முடிவுகள் வெளியாகும்.

News June 4, 2024

ஸ்டார் தொகுதிகளில் அதிகம் செலுத்தும் திமுக

image

நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் முக்கிய தொகுதிகளில் தபால் வாக்கில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. காஞ்சிபுரம், மத்திய சென்னை, வட சென்னை, தூத்துக்குடி, நீலகிரி உள்ளிட்ட 21 தொகுதிகளில் திமுக தற்போதுவரை முன்னிலை பெற்றுள்ளது. தயாநிதி மாறன், ஆ.ராசா, கனிமொழி முன்னிலையில் இருக்கும் நிலையில், வினோஜ் பி செல்வம், எல்.முருகன், பால் கனகராஜ் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

News June 4, 2024

கங்கனா ரனாவத் பின்னடைவு

image

இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட்டுள்ளார். அங்கு அவரை எதிர்த்து விக்ரமாதித்யா சிங் களம் கண்டார். இவர் இமாச்சலில் 6 முறை முதல்வராக இருந்த வீரபத்ர சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் கங்கனா பின்னடைவை சந்தித்து வருகிறார்.

News June 4, 2024

வி.கே.பாண்டியன் விவகாரம் – பாஜகவுக்கு சாதகமா? பாதகமா?

image

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட IAS அதிகாரி வி.கே. பாண்டியன், முதல்வர் பட்நாயக்கின் தனி செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையில், அவருக்கு அமைச்சர் அந்தஸ்தில் பணி வழங்கப்பட்டது. ஆட்சி, கட்சியில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வரும் அவர் மீது, பாஜக பல விமர்சனங்களை முன்வைத்தது. மண்ணின் மைந்தர் இன்றி, ஒடிஷாவை தமிழர் ஆளலாமா? என பிரசாரம் செய்தது. இது, பாஜகவுக்கு கை கொடுக்குமா? அல்லது பட்நாயக்கிற்கு சாதகமா?

News June 4, 2024

புதுச்சேரியில் பாஜக முன்னிலை

image

புதுச்சேரியில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பின்னடைவை சந்தித்துள்ளார்.

News June 4, 2024

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

image

மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 14, பாஜக 13 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி 1 தொகுதியில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

error: Content is protected !!