India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இவிஎம் மெஷின்களில் உள்ள வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுவுடன் பாஜகவின் முன்னிலை எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்த நிலையில் தற்போது ட்ரெண்ட் மாறி பாஜக 268ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் 200 தொகுதிகளைக் கடந்து முன்னிலை வகிக்கிறது. மற்ற வேட்பாளர்கள் 21 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ஃப்ரூஸ் 3,563 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். முன்னிலையில் இருந்த பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், 2,058 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில், ஹைதராபாத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் ஒவைசி, பாஜக சார்பில் மாதவி லதா கொம்பெல்லா, காங்கிரஸ் கட்சி சார்பில் முகம்மது வாலியுல்லா சமீர் உள்பட 30 பேர் போட்டியிடுகின்றனர். அத்தொகுதியில் ஒவைசி பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் மாதவி லதா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
ராமநாதபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் 30 சதவீதம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முறையான கையெழுத்து இல்லை போன்ற காரணங்களால் 30% வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் (பாஜக கூட்டணி), நவாஸ்கனி (திமுக கூட்டணி), ஜெயபெருமாள் (அதிமுக), சந்திரபிரபா (நாதக) போட்டியிடுகின்றனர்.
ஒடிஷா சட்டசபை தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான ஜனதா தளம் ஒரு இடத்திலும், காங்., ஒரு தொகுதியிலும், பாஜக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளை WAY2NEWS செயலியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் பாபு, நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
மத்திய சென்னை தொகுதியில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக 11,057, பாஜக 4,048, தேமுதிக 1,229, நாதக 571 வாக்குகள் பெற்றுள்ளன. அதேபோல், வட சென்னை தொகுதியில் திமுக 342, பாஜக 110, நாதக 82, அதிமுக 78 வாக்குகளும், தென் சென்னையில் திமுக 1,212, அதிமுக 560, பாஜக 267, நாதக 180 வாக்குகளும் பெற்றுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளில் தேசிய மாநாடு- மக்கள் ஜனநாயகக் கட்சி-காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்தும், பாஜக தனியாகவும் போட்டியிடுகின்றன. இதில் இதுவரை வெளியான முன்னணி நிலவரப்படி பாஜக 1 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. தேசிய மாநாட்டு கட்சி 1 தொகுதியிலும், சுயேச்சை 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறார்கள்.
ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் 23 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான YSR காங்., 4 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜன சேனா 5 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. தேர்தல் முடிவுகளை WAY2NEWS செயலியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆந்திராவின் நகரி சட்டப்பேரவைத் தொகுதியில் YSR காங்., கட்சியின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான ரோஜாவும், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் கலி பானு பிரகாஷும் களத்தில் உள்ளனர். சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, தபால் வாக்குகள் எண்ணிக்கையில் ரோஜா பின்தங்கியுள்ளார். வாக்குப்பதிவு நாளில் சொந்த கட்சியினரே தனக்கு உதவவில்லை என ரோஜா வேதனை தெரிவித்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.