India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் INDIA கூட்டணி 22 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 20 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அஜித் பவார் அணியானது பல இடங்களில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சரத் பவார் அணி 8 தொகுதிக்கும் மேலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு அவரை எதிர்த்து களம் காணும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் முதலில் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 20,456 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். முன்னிலையில் இருந்த பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், 15,923 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் 1,169 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் மோகன் 145 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
வட சென்னையில் திமுகவுடன் பாஜக மல்லுக்கட்டி வரும் நிலையில் நாதகவை விட மிக குறைவான வாக்குகளை வாங்கி அதிமுக மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. திமுக 342, பாஜக 110, நாதக 82, அதிமுக 78 வாக்குகளும் பெற்றுள்ளன. திமுக முதலிடத்திலும், பாஜக 2வது இடத்திலும், நாதக 3ஆவது இடத்திலும், அதிமுக 4ஆவது இடத்திலும் உள்ளன. இருப்பினும், வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் அதிமுக தொண்டர்கள் களத்தில் உள்ளனர்.
பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு முன்னிலையில் உள்ளார். பெரம்பலூர் தொகுதியில் அதிமுக சார்பில் சந்திரமோகன், பாஜக கூட்டணியில் பாரிவேந்தர் போட்டியிட்டனர். இதில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் அருண் நேரு மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று தொடங்கியவுடனே 350 புள்ளிகளை இழந்து 22,910 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக அபார வெற்றி பெறும் என்று கூறப்பட்டதால் நேற்று நிஃப்டி 600 புள்ளிகள் உயர்ந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் காங்கிரஸ் கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிப்பதால் சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன.
தென்காசி (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன், அதிமுக சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுவாமி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
ஆந்திரா மக்களவைத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பாஜக, ஜனசேனா உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 1 தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அரக்கோணம் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து வருகிறார். பாமக வேட்பாளர் பாலு 2ஆவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் விஜயன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பாஜக + மஜத கூட்டணி 18 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து தற்போது கைதான மஜத பிரமுகரும் ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலையில் உள்ளார். அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.