News June 4, 2024

ஒடிஷா தேர்தலில் ஓங்கும் பாஜக கை

image

ஒடிஷா சட்டசபை தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட 82 தொகுதிகளில் பாஜக 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 14 இடங்களிலும், காங்., 2 இடங்களிலும், மற்றவை 2 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

News June 4, 2024

கருத்து கணிப்பை பொய்யாக்கும் அதிமுக

image

மக்களவைத் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லாது எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், அதிமுக 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கருத்து கணிப்பை பொய்யாக்கும் வகையில் அக்கட்சி 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

News June 4, 2024

பங்குச் சந்தைகளில் கடும் சரிவு

image

எதிர்பாரா விதமாக INDIA கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிப்பதால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்து வருகின்றன. சந்தை வர்த்தம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்குள் நிஃப்டி 600 புள்ளிகளுக்கும் மேல் இழந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆட்சி மாற்றம் வரலாம் என்ற எண்ணத்தில் சந்தை ரியாக்ட் செய்து வருகிறது.

News June 4, 2024

கேரளாவில் பின்னடைவைச் சந்திக்கும் இடதுசாரிகள்

image

கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அம்மாநிலத்தை ஆளும் இடதுசாரிகள் தலைமையிலான LDF கூட்டணி 5 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை வகித்து வருகின்றன.

News June 4, 2024

தெலுங்கு தேசம் கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசம்

image

நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க தேவையான 88 இடங்களைக் கடந்து முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான ஜெகனின் YSR காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பவன் கல்யாணின் ஜன சேனா 16 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தெலுங்கு தேசம் இதுவரை 93 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

News June 4, 2024

திமுக 35 இடங்களில் முன்னிலை

image

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக 35 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக பாஜக – அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக 3, பாஜக 1, நாதக 0 இடங்களில் முன்னிலையில் உள்ளன. திமுகவின் நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் முன்னிலை பெற்றுள்ளனர்.

News June 4, 2024

முன்னிலை: பெரும்பான்மையை கடந்தது பாஜக கூட்டணி

image

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இதுவரை வெளியான முன்னிலை நிலவரப்படி பாஜக கூட்டணி 290க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 210க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

ஆளும் ஜெகன் கட்சிக்கு பெரும் பின்னடைவு

image

ஆந்திர தேர்தலில் ஆளும் YSR காங்கிரஸ் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அம்மாநில மக்கள் பெரியளவில் வாக்களிக்கவில்லை எனத் தெரிகிறது. மாறாக மாற்றத்தை எதிர்பார்த்து, அவர்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு வாக்களித்திருப்பது தேர்தல் முடிவின் மூலம் தெரிய வருகிறது. பவன் கல்யாண் கட்சியும் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்து வருகிறது.

News June 4, 2024

சவுமியா அன்புமணி 3,227 வாக்குகள் முன்னிலை

image

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தருமபுரி தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 5,407 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். திமுக வேட்பாளர் மணி 2,180 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் விஜயன் 1,917 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

News June 4, 2024

உ.பியில் INDIA கூட்டணி முன்னிலை

image

உத்தர பிரதேசத்தில் INDIA கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதன்படி, INDIA கூட்டணியில் சமாஜ்வாதி 35, காங்கிரஸ் 6 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. ஆனால், பாஜக 37 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

error: Content is protected !!