News June 4, 2024

பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை

image

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை வகித்து வருகிறார். தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்து வந்த அவர், இடையே 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தார். அதேசமயம், அங்கு அவரை எதிர்த்து களம் காணும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறார்.

News June 4, 2024

ஹைதராபாத்தில் ஒவைசி, மாதவி இடையே கடும் போட்டி

image

ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் மஜ்லீஸ் இ கட்சித் தலைவர் ஒவைசியும், பாஜக சார்பில் மாதவி லதாவும் போட்டியிடுகின்றனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் 2 பேர் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது. முதலில் ஒவைசி முன்னிலை பெற்றார். அதையடுத்து மாதவி லதா முன்னிலை வகித்தார். தற்போது ஒவைசி முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

ஓபிஎஸ் பின்னடைவு

image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜக கூட்டணி வேட்பாளரான ஓபிஎஸ் பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போதைய முன்னணி நிலவரப்படி, ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனி 7,695 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், ஓபிஎஸ் 1,982 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 1,985 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

News June 4, 2024

உ.பி.,யில் பாஜகவின் கோட்டை தகர்க்கப்படுகிறதா?

image

உத்தரபிரதேசத்தில் பாஜக – காங் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவும், INDIA கூட்டணியும் சரிபாதி தொகுதிகளில் முன்னிலையில் இருப்பது, அங்கு ஆளும் பாஜக கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ராமர் கோயில் நிர்மாணம் பாஜகவுக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. ராகுல், பிரியங்காவின் பிரசாரங்கள், உ.பி., வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது, தேர்தல் முடிவின் மூலம் தெரிகிறது.

News June 4, 2024

டெல்லியில் பாஜக 6, காங்கிரஸ் 1 தொகுதியில் முன்னிலை

image

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் பாஜக தனித்தும், ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. இதில் தற்போதைய முன்னிலை நிலவரப்படி பாஜக 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 1 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

News June 4, 2024

சிவகங்கையில் பாஜகவை முந்திய நாம் தமிழர்

image

சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 7,733 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

சேவியர் தாஸ் (அதிமுக) – 5,282 வாக்குகள்
எழிலரசி (நாதக) – 2,750 வாக்குகள்
தேவநாதன் யாதவ் (பாஜக) – 2,731 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

News June 4, 2024

மேற்கு வங்கத்தில் கடும் போட்டி

image

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 20 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. பாஜகவும் 20 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், அங்கு கடுமை போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது.

News June 4, 2024

டிடிவியை பின்னுக்கு தள்ளிய தங்க தமிழ்ச்செல்வன்

image

தேனி மக்களவைத் தொகுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளனர். திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 26,347 வாக்குகளும், டிடிவி 12,531 வாக்குகளும் பெற்றுள்ளனர். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சுமார் 13,816 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

News June 4, 2024

2 தொகுதிகளிலும் ராகுல் முன்னிலை

image

மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட்ட 2 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறார். ரேபரேலியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் தொடக்கம் முதலே பின்னடைவை சந்தித்து வருகிறார். வயநாடு தொகுதியிலும் அவர் முன்னிலை வகித்து வருகிறார். இதன் மூலம் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

News June 4, 2024

ராதிகா சரத்குமார் பின்னடைவு

image

விருதுநகர் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார். விருதுநகர் தொகுதியில் திமுக, அதிமுக , பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. இதில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை வகிக்கிறார். இதேபோல, திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

error: Content is protected !!