News June 4, 2024

திருவண்ணாமலை தொகுதியில் திமுக முன்னிலை

image

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை தொகுதியில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் அண்ணாத்துரை 12,106 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 8,701 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 8,012 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

News June 4, 2024

கர்நாடகாவில் பாஜக கூட்டணியின் ஆதிக்கம்

image

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக, மஜத கூட்டணியே முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 23இல் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் அந்த மாநிலத்தில் பாஜக வலுவாக காலூன்றும் சூழல் உருவாகியுள்ளது.

News June 4, 2024

நெல்லையில் அதிமுக 4ஆவது இடம்

image

திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 17,302 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். நயினார் நாகேந்திரன் (பாஜக) – 14,308,
சத்யா (நாதக) – 2,936, ஜான்சி ராணி (அதிமுக) – 2,599 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

News June 4, 2024

ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆந்திரா

image

நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்க தேவையான 88 இடங்களைக் கடந்து, 113 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான ஜெகனின் YSR காங்கிரஸ் வெறும் 23 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பவன் கல்யாணின் ஜன சேனா 17 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து சந்திரபாபு நாயுடு ஆட்சியமைப்பதற்காக வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

News June 4, 2024

நீலகிரியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிய பாஜக

image

நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்தில் பின்தங்கியுள்ளது. திமுக வேட்பாளர் ஆ.ராசா 15,256 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் எல்.முருகன் 8,618 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக 2வது இடத்தை பிடித்த நிலையில், அதிமுக 7,368 வாக்குகளுடன் 3ஆவது இடத்தையும், 1,017 வாக்குகளுடன் நாதக 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

News June 4, 2024

எடுபடவில்லையா சீமானின் பிரசாரம்?

image

கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த சீமானின் நாம் தமிழர் கட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது. இதுவரை கிடைத்த தகவலின் படி, நாதக ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை. நாம் தமிழர் கட்சியின் அடையாளமான விவசாயி சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, மைக் சின்னம் சீமானுக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

தென்காசி தொகுதியில் ஜான் பாண்டியன் பின்னடைவு

image

தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 1,126 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

ஜான் பாண்டியன் (பாஜக+) – 971 வாக்குகள்
கிருஷ்ணசாமி (அதிமுக+) – 618 வாக்குகள்
இசை மதிவாணன் (நாதக) – 287 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

News June 4, 2024

திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் வேட்பாளர் முன்னிலை

image

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் 17,891 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட SDPI கட்சி 6,989 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா 4,373 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட நிரஞ்சனா 4ஆவது இடத்திலும் உள்ளனர்.

News June 4, 2024

கர்நாடகா: பாஜக கூட்டணி 23, காங்கிரஸ் 5இல் முன்னிலை

image

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதுவரை வெளிவந்த நிலவரப்படி பாஜக 20 தொகுதிகளிலும், மஜத 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

News June 4, 2024

திருவள்ளூரில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை

image

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் தொகுதியில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 26,206 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 11,701 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் பாலகணபதி 10,012 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

error: Content is protected !!