News June 4, 2024

மயிலாடுதுறையில் காளியம்மாள் 4ஆவது இடம்

image

மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 12,378 வாக்குகளுடன் முன்னிலையில் வகிக்கிறார்.

பாபு (அதிமுக) – 7,008 வாக்குகள்
ஸ்டாலின்(பாமக) – 4,112 வாக்குகள்
காளியம்மாள் (நாதக) – 2,949 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

News June 4, 2024

காங்கிரஸ் 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை

image

இந்தியளவில் காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. 2019ஆம் ஆண்டு அக்கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில் இந்த முறை இரு மடங்குக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. 10.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 290 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 223 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

News June 4, 2024

36 தொகுதிகளில் திமுக முன்னிலை

image

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிமுக கூட்டணி விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் 4ஆவது இடத்தில் உள்ளது.

News June 4, 2024

ஜம்மு-காஷ்மீரில் பாஜக 2, என்சி 2 தொகுதிகளில் முன்னிலை

image

ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜுஹல் கிசோர் 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். உதம்பூர் தொகுதியில் பாஜகவின் ஜிதேந்திர சிங் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அனந்த்நாக் ரஜோரி, ஸ்ரீநகர் தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி முன்னிலை வகிக்கிறது. பாரமுல்லாவில் சுயேச்சை வேட்பாளர் ரசித் சேக் 37,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

மதுரையில் சரவணன் தொடர்ந்து பின்னடைவு

image

மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் (சிபிஎம்) – 51,284 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

சரவணன் (அதிமுக) – 32,953 வாக்குகள்
ராம சீனிவாசன் (பாஜக) – 19,523 வாக்குகள்
சத்யா தேவி (நாம் தமிழர்) – 14,862 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.

News June 4, 2024

நாகையில் அதிமுக வேட்பாளர் பின்னடைவு

image

நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் 4,015 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

சுர்ஜித் சங்கர் (அதிமுக) – 2,034 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

News June 4, 2024

கிருஷ்ணசாமி – ராணிக்கு இடையே கடும் போட்டி

image

தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கும், அதிமுக கூட்டணி வேட்பாளரான கிருஷ்ணசாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ராணி 12,125, கிருஷ்ணசாமி 11,924 வாக்குகள் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசம் வெறும் 201 மட்டுமே. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். பாஜக கூட்டணி வேட்பாளரான ஜான் பாண்டியன் 5,779 வாக்குகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

தருமபுரியில் சவுமியா முன்னிலை

image

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தருமபுரி தொகுதியில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 49,705 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். திமுக வேட்பாளர் மணி 31,802 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் அசோகன் 28,740 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

News June 4, 2024

திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

image

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 17 இடங்களிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திரிணாமுல் காங்கிரஸ் அங்கு படுதோல்வி அடையும் எனக் கணித்திருந்த நிலையில், தற்போது அக்கட்சி முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News June 4, 2024

ஒடிஷா தேர்தலில் ஆளும் கட்சிக்கு பின்னடைவு

image

ஒடிஷா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக்கின் ஆளும் பிஜு ஜனதா தளம் சரிவை சந்தித்து வருகிறது. தற்போது வரை பாஜக 50 இடங்களிலும், பிஜு ஜனதா 30 இடங்களிலும், காங்., 6 இடங்களிலும், சிபிஎம் 1 இடத்திலும், சுயேச்சை 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன. ஆட்சியமைக்க 74 இடங்கள் தேவைப்படும் நிலையில், சிறிது நேரத்தில் யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பது தெரிந்துவிடும்.

error: Content is protected !!