India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவால், இடைக்கால ஜாமினில் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி கட்சிப் போட்டியிட்டது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக 6, காங்கிரஸ் 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளன. ஆம் ஆத்மி கட்சி வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கியுள்ளது.
திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு, காலை முதல் முன்னிலை வகித்து வந்த அவர், தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் தற்போது முன்னிலையில் உள்ளார். சிபிஐ வேட்பாளர் பன்னியன் ரவீந்திரன், 3ஆவது இடத்தில் உள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 290 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 223 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில், சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அதிக தொகுதிகளில் வெல்லக்கூடும், இந்தியா கூட்டணி வென்றால் பிரதமர் வேட்பாளராக கெஜ்ரிவால் பெயர் பரிசீலிக்கப்படும் என பேசப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக, ஆம் ஆத்மி கட்சி வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கியுள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் டெல்லி மக்களிடையே பெற்றிருந்த செல்வாக்கை இழக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாஜகவுக்கு கடும் சவால் விடுக்கும் வகையில் INDIA கூட்டணி 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து, 220 தொகுதிகளுக்கு கீழ் குறையாமல் INDIA கூட்டணி நிலைத்து நிற்பதால், தேர்தல் முடிவு குறித்த சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரணி தொகுதியில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் தரணி வேந்தன் 32,505 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 20,802 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாமக வேட்பாளர் கணேஷ் குமார் 16,740 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆந்திர சட்டசபை தேர்தலில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளில், 19 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்ற பவன் கல்யாண் கட்சி, இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைக் கூட ஜன சேனா பிடிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 8,865 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) – 5,459 வாக்குகளும்,
பசிலியான் நசரேத் (அதிமுக) – 842 வாக்குகளும்
மரிய ஜெனிபர் (நாதக) – 349 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பொய்யாக்கும் வகையில், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் NDA கூட்டணிக்கு INDIA கூட்டணி கடும் போட்டியை அளித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, NDA கூட்டணிக்கு 44%, INDIA கூட்டணிக்கு 45% வெற்றி வாய்ப்புள்ளதாக NDTV கணித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜகவும் 5 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளன. இங்குள்ள மாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வரும், மஜத தலைவருமான ஹெச்.டி. குமாரசாமி போட்டியிட்டுள்ளார். அவர் இத்தொகுதியில் 2 லட்சத்துக்கும் 18 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளரை விட 88 ஆயிரத்துக்கும் மேலான வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.