News June 4, 2024

அதிமுக வீழ்ச்சிக்கு ஓபிஎஸ், டிடிவி காரணமா?

image

மக்களவைத் தேர்தலில் இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின்படி அதிமுக ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. இந்த மோசமான வீழ்ச்சிக்கு டிடிவி, ஓபிஎஸ், சசிகலா நீக்கம் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மூன்று பேரும் நீக்கப்பட்டதால், அவர்களைச் சார்ந்த சமூக வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. அதேபோல், கொங்கு மண்டலத்தில் உள்கட்சி பிரச்னையால் வெற்றி பெறமுடியவில்லை.

News June 4, 2024

விளவங்கோடு காங்., வேட்பாளர் தாரகை வெற்றி

image

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி பெற்றுள்ளார். விளவங்கோடு MLA விஜயதாரணி, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனால் அந்தத் தொகுதி காலியான நிலையில், மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பாஜக – நந்தினி, நாம் தமிழர் – ஜெமினி, அதிமுக – ராணி உள்ளிட்டோர் போட்டியிட்ட நிலையில், தாரகை கத்பட் வெற்றி பெற்றுள்ளார்.

News June 4, 2024

தேர்தலில் இருந்து பாடம் கற்பாரா இபிஎஸ்?

image

இபிஎஸ் தலைமையின் கீழ் அதிமுக வந்ததில் இருந்து ஒரு தேர்தலில் கூட வெற்றிபெறவில்லை. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், அதிமுக மேலும் பலவீனமடையும். எனவே, இந்த தேர்தலில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொண்டு, பிரிந்து சென்றவர்களை இணைக்கும் பணிகளில் இறங்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News June 4, 2024

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி சாத்தியமா?

image

அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் இபிஎஸ் மீது தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் ஓரளவுக்கு வெற்றிபெற முடியும். அதுமட்டுமல்ல, ஓபிஎஸ், டிடிவி உடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீண்டும் அவர்களை இணைக்க வேண்டும் என பலரும் கருதுகிறார்கள். இது சாத்தியமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

News June 4, 2024

அதிமுக சரிவுக்கான முக்கிய காரணம்

image

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக என்ற இரும்பு கோட்டை ஆட்டம் காண ஆரம்பித்தது. ஆரம்பத்தில் உறுதியான தலைவர்கள் இல்லாததால், தொண்டர்கள் மத்தியில் தொய்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, சசிகலா, தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் என பல அணிகளாக அதிமுக பிரிந்ததால், அதிமுக என்ற கோட்டைக்கு அடித்தளமாக இருந்த தொண்டர்கள் பல்வேறு அணிகளாக சிதறி கிடக்கின்றனர். இதனால், அதிமுகவின் வாக்கு வங்கி அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.

News June 4, 2024

ஒடிஷாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக

image

ஒடிஷா சட்டசபை தேர்தலில் பாஜக 80 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் 49 இடங்களிலும், காங்., 15 இடங்களிலும், பிற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆட்சியமைக்கத் தேவையான 74 இடங்களை விட, கூடுதலான இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால், முதல் முறையாக ஒடிஷாவில் தாமரை மலர்கிறது.

News June 4, 2024

ராஜினாமா செய்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி

image

ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ஆளும் YSR காங்., கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சி 13 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருப்பதால், ஆட்சி கைநழுவிப் போகிறது. தோல்வியைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி விலகுகிறார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. TDP அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.

News June 4, 2024

10ஆவது தோல்வியை பதிவு செய்கிறார் இபிஎஸ்

image

இபிஎஸ் தலைமை பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக தொடர் சரிவுகளை சந்தித்துள்ளது. 2017இல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019இல் நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டில் சட்டப்பேரவை இடைத்தேர்தல், 2020இல் ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2021இல் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022இல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023இல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020இல் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அதிமுக தோற்றது.

News June 4, 2024

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த அமித் ஷா

image

பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் அங்கம் வகித்து வரும் அரசியல் கட்சித் தலைவர்களை டெல்லி வரச் சொல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். INDIA கூட்டணி 230-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அக்கூட்டணியின் தலைவர்கள் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில், நிதிஷ்குமார் உள்ளிட்டத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

News June 4, 2024

மகாராஷ்டிராவில் INDIA கூட்டணி முன்னிலை

image

மகாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து பிரிந்து அக்கட்சியையும், சின்னத்தையும் பெற்ற முதல்வர் ஷிண்டே அணி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. INDIA கூட்டணியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி 11 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேசியவாத காங்.,இல் இருந்து பிரிந்த அஜித் பவாரின் அணி 1 இடத்திலும், சரத்பவார் அணி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிளவுபட்ட அணிகளுக்கு சின்னங்களைத் தவிர எதுவும் மிஞ்சவில்லை.

error: Content is protected !!