News June 4, 2024

நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற மன்சூர்

image

வேலூர் தொகுதியில் நோட்டாவை விட மன்சூர் அலிகான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற கட்சியை தொடங்கிய அவர், பலாப்பழம் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டார். இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நோட்டாவுக்கு 6,695 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், மன்சூர் அலிகான் 2,181 வாக்குகளையே பெற்றுள்ளார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

News June 4, 2024

7 முறை தென்காசியில் தோல்வி அடைந்த கிருஷ்ணசாமி

image

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தென்காசியில் 7ஆவது முறையாக தோல்வியை சந்தித்துள்ளார். 1998,1999, 2004, 2009, 2014, 2019 மற்றும் 2024 வரை தென்காசியில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் அவர், தோல்வியையே சந்தித்து வருகிறார். தென்காசியில் வலுவாக இருப்பதாக அவர் கூறிவந்த நிலையிலும், மக்கள் அவரை புறக்கணித்துள்ளனர். 1996இல் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் அவர் சுயேச்சை எம்எல்ஏவாக வென்றார்.

News June 4, 2024

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அதிர்ச்சித் தோல்வி

image

ஐந்து தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று ஒடிஷாவை 5 முறை ஆட்சி செய்த நவீன் பட்நாயக் தோல்வி அடைந்துள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் தோல்வியையே சந்தித்திராத பட்நாயக், கந்தபஞ்சி தொகுதியில் இம்முறை பாஜக வேட்பாளர் லக்ஷ்மன் பகிடம் தோல்வியடைந்துள்ளார். இதனையடுத்து, 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒடிஷா முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறார் நவீன் பட்நாயக்.

News June 4, 2024

மோடிக்கு எதிரான எதிர்ப்பு அலை: ஸ்டாலின்

image

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம், இந்த தேர்தலில் மீதமிருந்த 1 தொகுதியையும் சேர்த்து 40க்கு 40 வெற்றி பெற வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறுவதாக தெரிவித்துள்ளார். ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கூட கிடைக்காத அளவிற்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது என விமர்சித்த அவர், பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை உள்ளதை இத்தேர்தல் காட்டுவதாக கூறியுள்ளார்.

News June 4, 2024

தமிழ்நாட்டின் வெற்றிடத்தை நிரப்பினார் ஸ்டாலின்

image

கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தமிழ்நாட்டில் வலிமையான தலைவர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின் அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர் வெற்றியை பதிவு செய்து வருகிறார். இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் தமிழ்நாட்டின் அசைக்க முடியாத தலைவராக ஸ்டாலின் உருவெடுத்துள்ளார்.

News June 4, 2024

கொங்கு மண்டலத்தை கோட்டைவிட்ட அதிமுக

image

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியான அதிமுக, 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக, அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மண்டலத்திலும் அந்தக் கட்சி தனது வெற்றி வாய்ப்பை பறிகொடுத்துள்ளது. இதற்கு அதிமுக 3 அணியாக பிரிந்துள்ளதே காரணம் எனக் கூறப்பட்டாலும், முன்னதாக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததும் ஒரு காரணமாக இருக்கக் கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

News June 4, 2024

நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை

image

நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவையை அவசரமாக கூட்டுகிறார் பிரதமர் மோடி. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நாளை அமைச்சரவை கூடுகிறது. இதனால், என்ன முடிவு எடுக்கப் போகிறார் பிரதமர் என்று நாடே நாளைய தினத்தை நோக்கி காத்து கொண்டு இருக்கிறது. அமைச்சரவையை முழுவதுமாக கலைத்துவிட்டு மீண்டும் புதிய அமைச்சரவை அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News June 4, 2024

எட்டாக்கனியான பாஜகவின் ‘இந்தமுறை 400’ இலக்கு

image

2024 தேர்தலில் பாஜகவின் முக்கிய முழக்கங்களுள் ஒன்று ‘இந்தமுறை 400’ தொகுதிகளில் வெற்றி. அனைத்துப் பிரசார கூட்டங்களிலும் பாஜகவின் மூத்த தலைவர்கள் இந்த முழக்கத்தை எழுப்ப தவறியதில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் இதற்கு நேரெதிராக வெளிவந்துள்ளன. பாஜக கூட்டணி சுமார் 290 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பாஜக மட்டும் 240 இடங்களில் வெற்றிபெறும் நிலையில் உள்ளது.

News June 4, 2024

வரலாற்றில் பெரும் வெற்றி: மோடி

image

என்டிஏ மீது நம்பிக்கை வைத்து 3ஆவது முறையாக தொடர் வெற்றியை மக்கள் அளித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் இது ஒரு பெரும் வெற்றி என்றும், அனைவரையும் தலைவணங்குவதாகவும் கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்த நற்பணிகளை மேலும் தொடருவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு அபார வெற்றி

image

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2ஆவது இடத்தையும், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபால் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

error: Content is protected !!