India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திராவின் குண்டூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்ட சந்திரசேகர் பெம்மாசானியின் சொத்து மதிப்பு ரூ.5,785 கோடி. இவர், 3.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ரூ.4,568 கோடி சொத்துக்களுடன் 2ஆவது பெரிய பணக்கார வேட்பாளரான பாஜகவின் கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி, தெலங்கானாவின் செவெல்லா தொகுதியில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தனிக் கட்சியாக 240 தொகுதிகளை வென்றிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி மொத்தமாக சேர்த்து 234 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. இதனை நேரடியாக விமர்சித்திருக்கும் பிரதமர் மோடி, INDIA கூட்டணி சேர்ந்து பாஜகவை கூட வீழ்த்த முடியவில்லை என்று கூறியிருக்கிறார். இருப்பினும், பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பாஜக 17 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான மஜத 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
ஆந்திர சட்டப்பேரவையில் உள்ள 175 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் வென்றுள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.
* தெலுங்கு தேசம் – 135
* ஜனசேனா – 21
* ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – 11
* பாஜக – 8
உ.பி., மகாராஷ்டிரா, மே.வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்த இடங்களை வெல்ல பாஜக கூட்டணி தவறியுள்ளது. உ.பி.,யில் பாஜக கூட்டணி 36 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 2019இல் மகாராஷ்டிராவில் 41 இடங்களை வென்ற NDA கூட்டணி இம்முறை 17 இடங்களில் மட்டுமே வென்றது. அதேபோல, NDA கூட்டணியின் வெற்றி மே.வங்கத்தில் 12 இடங்களிலும், பிஹாரில் 29 தொகுதிகளிலும் மட்டுப்படுத்தப்பட்டது, அதன் 400+கனவை சிதைத்தது.
மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக 240 தொகுதிகளில் வென்றுள்ளது. அக்கட்சிக்கு நாடு முழுவதும் 23.6 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது 2019இல் கிடைத்த வாக்குகளைக் காட்டிலும் 70 லட்சம் அதிகம் ஆகும். அதேநேரத்தில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வென்றுள்ளது. அக்கட்சிக்கு 13.7 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2019ஆம் ஆண்டில் அக்கட்சிக்கு கிடைத்த வாக்குகளை விட 1.8 கோடி அதிகமாகும்.
அதானி குழுமம் நிதித் துறையில் கால்பதித்துள்ளது. விமான பயணியரை மையப்படுத்தி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி & VISA கார்டு நிறுவனத்துடன் இணைந்து, ‘கோ பிராண்டட்’ என்ற பெயரில் கிரெடிட் கார்டு ஒன்றை அக்குழுமம் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்டை பயன்படுத்துவோருக்கு, ‘அதானி ஒன்’ செயலியிலும், மற்ற பிற அதானி குழும சேவைகளுக்கு கட்டணம் செலுத்துவதிலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வென்றிருந்தது. இதனால் மத்தியில் தனிப் பெரும்பான்மை பலத்துடன் அசைக்க முடியாத கட்சியாக உருவெடுத்தது. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக எதிர்பார்ப்பிற்கு மாறாக 240 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதாவது 2019ஆம் ஆண்டு முடிவுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு தேர்தலில் 63 தொகுதிகளை பறிகொடுத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்திருக்கும் நிலையில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து பாஜக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அறிவிப்பு வெளியாகலாம். INDIA கூட்டணி ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கும் நிலையில் டெல்லியில் இன்று அக்கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பாஜக தலைமையில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஜன சேனா, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர். ஆட்சியமைப்பது குறித்த முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.