News June 5, 2024

பாஜகவுக்கு கை கொடுக்காத இடஒதுக்கீடு பிரசாரம்

image

தேர்தல் பிரசாரத்தின் போது, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு குறித்து மோடி, பாஜக தலைவர்கள் பல வாக்குறுதி அளித்தனர். இதனால், 131 எஸ்சி, எஸ்டி தனித் தொகுதிகளில் பாஜக அதிக இடங்களில் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 53இல் மட்டுமே பாஜக வென்றுள்ளது. 2019 தேர்தலில் 77இல் வென்ற நிலையில், இம்முறை 24 தொகுதிகள் குறைந்துள்ளன. காங்கிரஸ் கட்சி 12 இடங்கள் கூடுதலாக 33இல் வென்றுள்ளது.

News June 5, 2024

பிரதமரைத் தீர்மானிக்கப் போகும் TDP & JDU

image

தேர்தல் முடிவுகளின்படி பாஜகவுக்கு 240 தொகுதிகளும் INDIA கூட்டணிக்கு 234 தொகுதிகளும் கிடைத்திருக்கின்றன. இதனால், JDU (12) மற்றும் TDP (16) ஆகிய கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்து இரு கட்சிகளும் உள்ளன. அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் இருக்கின்றனர்.

News June 5, 2024

ராஜினாமா செய்கிறாரா பிரதமர் மோடி?

image

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இக்கூட்டத்திற்குப் பின் பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், மொத்த அமைச்சரவையையும் கலைத்துவிட்டு கூட்டணி கட்சிகளுடன் தே.ஜ. கூட்டணி புதிய அமைச்சரவையை அமைக்க வாய்ப்புள்ளது. என்ன செய்யப் போகிறார் மோடி?

News June 5, 2024

பாஜகவை நேருக்கு நேராக 61 இடங்களில் வீழ்த்திய காங்கிரஸ்

image

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவும், காங்கிரசும் நேருக்கு நேராக 190 தொகுதிகளில் மோதின. இதில் 15 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் கட்சி வென்றது. இது வெறும் 8% மட்டுமே ஆகும். ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் 214 தொகுதிகளில் பாஜகவும், காங்கிரசும் நேருக்கு நேராக மோதின. இதில் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் வென்றுள்ளது. இது 28%க்கும் மேல் ஆகும்.

News June 5, 2024

ஜூஸை குடிக்கக் கூடாதா?

image

கரும்பு ஜூஸை மட்டுமல்ல பொதுவாகவே எந்த ஜூஸாக இருந்தாலும், ஒரு நாளைக்கு இவ்வளவு தான் குடிக்க வேண்டும் என்ற அளவு இருக்கிறது. பெரியவர்கள் 500 மி.லி, குழந்தைகள் 250 மி.லி ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்கலாம். இந்த அளவிற்கு மேல் குடிப்பதால், உடல் உபாதைகள் ஏற்படலாம். குறிப்பாக, எல்லோருமே சர்க்கரை (30 கிராம்) அளவு அதிகமாக கலந்து ஜூஸ் பருகுவதைத் தவிர்க்க வேண்டும் என்று உணவியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

News June 5, 2024

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சிக்கல்?

image

2019 தேர்தலில் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 71இல் வென்றது. ஆனால் 2024 தேர்தலில் அக்கட்சி 33 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம், சட்டம்-ஒழுங்கு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் பாஜக கூடுதல் இடங்களில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால் யோகியின் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

News June 5, 2024

வெள்ளி விலை கிலோவுக்கு ₹2,300 குறைவு

image

சென்னையில் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ₹2.30 (கிலோ ₹2,300) குறைந்து ₹96.20க்கு (கிலோ ₹96,200) விற்பனையாகிறது. வழக்கமாக வெள்ளியின் விலை ஒரே நாளில் இவ்வளவு இறக்கம் காணாது என்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹53,800க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6745க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று ₹20 குறைந்து ₹6725க்கு விற்பனையாகிறது.

News June 5, 2024

ADMK, BJP இணைந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

image

தமிழகத்தில் அதிமுக 20.47 சதவீத வாக்குகளையும் பாஜக 11.20% வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. ஆனால், திமுகவின் மொத்த வாக்குகள் 26.93% மட்டுமே. இதனால், அதிமுக பாஜக கூட்டணி பிரியாமல் இருந்திருதால் தமிழகத்தில் சில தொகுதிகளை அவர்கள் வென்றிருப்பார்கள் என்று விமர்சகர்கள் கூறுகின்றன. தமிழகத்தின் அனைத்து தொகுதிளிலும் இரண்டு & முன்றாவது இடங்களை இந்த இரு கட்சிகள்தான் கைப்பற்றி இருக்கின்றன.

News June 5, 2024

5ஜி அலைக்கற்றை ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

image

தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சியின் அளவுகோளாக கருதப்படும் 5ஜி அலைக்கற்றை ஏல ஒதுக்கீடு நடைமுறை 3ஆவது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடப்பதாக இருந்த இந்த ஏலம் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, ஜூன் 13ஆம் ஆம் தேதி நடைபெறும் என மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் ₹96,318 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றை ஒதுக்க வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

News June 5, 2024

முன்னாள் முதல்வருக்கா இந்த நிலை?

image

ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்தவர் சந்திரசேகர ராவ். தனி மாநிலம் உருவானது முதல் தொடர்ந்து 2 முறை முதல்வராக இருந்துள்ளார். இவருடைய பிஆர்எஸ் கட்சி, மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. அவரது கட்சியின் 8 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்ததோடு, வாக்கு சதவீதம் தற்போது 17%க்கும் குறைவாக உள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் பிஆர்எஸ் கட்சியின் வாக்கு சதவீத, 41.71% ஆக இருந்தது.

error: Content is protected !!