News June 5, 2024

அதிக வாக்குகள் பெற்றும் தனி மெஜாரிட்டி பெறாத பாஜக

image

கடந்த தேர்தலை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றும், அதனால் தனி மெஜாரிட்டி பெற முடியவில்லை. 2019 தேர்தலில் 36.36% வாக்குகளை பெற்ற பாஜக, 303 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது. ஆனால், நடந்து முடிந்த 2024 தேர்தலில் 36.56% வாக்குகளை பெற்றிருந்தும், பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய இடங்களை பெற முடியவில்லை. பாஜகவின் தனி மெஜாரிட்டி கனவை கனவை, INDIA கூட்டணி தகர்த்துள்ளது.

News June 5, 2024

இந்தியாவின் இளம் எம்.பி.க்கள்

image

நடந்து முடிந்த 18ஆவது மக்களவைத் தேர்தலில், வென்ற 25 வயதிற்குட்பட்ட நான்கு இளம் எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்திற்குள் கால்பதிக்க உள்ளனர். அவர்களின் விவரம் இதோ:- ராஜஸ்தானின் பாரத்பூர் தொகுதி எம்.பி., சஞ்சனா ஜாதவ் (காங்கிரஸ்) , பிஹாரின் சமஸ்திபூர் தொகுதி எம்.பி., ஷாம்பவி சவுத்ரி (எல்.ஜே.பி), உ.பி., மச்சில்சாஹர் தொகுதி எம்.பி., பிரியா சரோஜ் & கவுசம்பி தொகுதி எம்.பி., புஷ்பேந்திர சரோஜ் (சமாஜ்வாதி).

News June 5, 2024

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும்

image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிவகாசி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், தருமபுரி, சென்னை, காஞ்சி, தி.மலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிக கவனமாக செல்லவும்.

News June 5, 2024

மக்கள் முடிவை மோடி மாற்ற துடிக்கிறார்: கார்கே

image

மக்கள் விருப்பத்துக்கு மாறாக மோடி செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். INDIA கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், ” மக்கள் மோடியை தேர்தலில் நிராகரித்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சி அமைக்க அவர் மேற்கொள்ளும் வழிமுறை ஜனநாயகத்துக்கு எதிரானது. மக்கள் தீர்ப்பை மோடி மாற்ற துடித்து வருகிறார்” என்றார். இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பது சில மணி நேரத்தில் தெரியவரும்.

News June 5, 2024

டெல்லி சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த்

image

இமயமலைக்கு ஒரு வாரம் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் வழிபாடு நடத்தினார். தற்போது, தனது பயணத்தை முடித்துள்ள அவர் டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் என இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். ரஜினி இமயமலையில் இருந்து வந்ததும் தேர்தலில் வெற்றிபெற்றதற்கு ஸ்டாலின், மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

News June 5, 2024

டிஷ் கட்டணங்கள் 8% வரை உயர வாய்ப்பு

image

டிவி சேனல்களுக்கான டிஷ் கட்டணம் 5 – 8% வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஸ்னி ஸ்டார், ஜி, சோனி, Viacom18 ஆகிய பொழுதுபோக்கு மற்றும் கிரிக்கெட் ஒளிபரப்பு சேனல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு டிஷ் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏர்டெல் டிஜிட்டல் ஏற்கெனவே கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 5, 2024

சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கு அன்றும்… இன்றும்..

image

கடந்த ஆண்டு கைதான சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற முடிவெடுத்தார். இதற்காக, பாஜகவுடன் கூட்டணி பேச டெல்லி சென்ற அவருக்கு, பிரதமர் அலுவலகம் அனுமதி தராததால் ஆந்திரா திரும்பினார். பிறகு ஒரு வழியாக பாஜகவை கூட்டணியில் இணைத்தார். ஆனால், இன்றோ காட்சிகள் அப்படியே தலைகீழாக மாறியுள்ளன. சந்திரபாபுவின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.

News June 5, 2024

மோடியை பிரதமராக்க NDA தீர்மானம்

image

மோடியை மீண்டும் பிரதமராக்க, டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது, NDA கூட்டணி கட்சித் தலைவர்கள் இதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். இதனையடுத்து 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, மீண்டும் இந்தியாவில் கூட்டணி ஆட்சி நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

News June 5, 2024

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

image

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 2.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 1.87 லட்சம் பேர் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் <>www.tneaonline.org<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

News June 5, 2024

வெற்றியும், தோல்வியும் அரசியலில் ஒரு அங்கம்: மோடி

image

பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் மோடி பங்கேற்றார். அப்போது, வெற்றியும், தோல்வியும் அரசியலில் ஒரு அங்கம் எனவும், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும், வரும் காலங்களிலும் அதைத் தொடர்வோம் என தெரிவித்ததாக, தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்த பாஜக, இம்முறை ஆட்சி அமைக்க கூட்டணியை நம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!