News June 5, 2024

மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

image

3ஆவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியால் இந்தியா-அமெரிக்க உறவு வலுப்படும் என ஜோ பைடன் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மோடியின் வெற்றிக்கு சீனா ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News June 5, 2024

இந்திய அணி அபார வெற்றி

image

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. நியூ யார்க்கில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் Gareth Delany 26 ரன்கள் எடுத்தார். IND தரப்பில் ஹர்திக் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய IND அணி, 12.2 ஓவர்களில் 97/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

News June 5, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

* மேஷம் – மன உறுதியுடன் செயல்படுங்கள் , *ரிஷபம் – இன்றைய நாள் நிறைவாக இருக்கும், *மிதுனம் – செய்யும் செயலில் ஆர்வம் தேவை, *கடகம் – ஆக்கப்பூர்வமான நாளாக அமையும், *சிம்மம் – சோர்வு ஏற்படும், *கன்னி – பயம் உண்டாகும், *துலாம் – தடை வரும், *விருச்சிகம் – இன்பம் ஜொலிக்கும், *தனுசு – மகிழ்ச்சி பொங்கும், *மகரம் – கோபத்தை தவிர்க்கவும், *கும்பம் – அடுத்தவர்களுக்கு உதவி செய்யவும், *மீனம் – பக்தி உண்டாகும்.

News June 5, 2024

முதல் சுற்றிலேயே வெளியேறிய சிந்து

image

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேயின் வென் சி ஹூவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 15-21, 21-15, 14-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்பை 21-18, 21-6 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான் வீழ்த்தினார்.

News June 5, 2024

பாஜக ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பைரவர்

image

தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த சூழலில், தனி விமானம் மூலம் திருச்சி வந்த அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருமயம் சென்று கோட்டை பைரவரை வழிபட்டு சென்றார். இவ்வளவு மெனக்கெட்டு வந்து, அவர் பைரவரை வழிபட்டது ஏன் என்ற கேள்வி எழுந்தது. கோட்டை பைரவரை வழிபட்டால் ஆட்சி நிலைக்கும் என்பது நம்பிக்கை. அமித் ஷாவின் இந்தப் பயணம் அந்த வேண்டுதலுக்காகவும் இருக்கலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

News June 5, 2024

பாஜக ஆட்சி பாதியில் கவிழுமா?

image

மோடி தலைமையில் அமையவுள்ள பாஜக அரசு அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு நீடிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. NDA கூட்டணியில் எந்நேரத்திலும் கருத்து வேறுபாடு எழ வாய்ப்பு இருக்கிறது. பாஜகவை ஆட்டிப்படைக்கும் அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. நிதிஷ், சந்திரபாபு, ஷிண்டே ஆகியோரின் கண் அசைவுகளை கண்டுகொள்ளவில்லை என்றால், ஆட்சி நிலைக்க வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.

News June 5, 2024

இந்தியா ஆஸ்திரேலியாவை பழிவாங்க விரும்பும்: ஹெட்

image

டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களை பழிவாங்க விரும்பும் என ஆஸி., அணி வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மீண்டும் இறுதிப் போட்டியில் மோதினால் அது நன்றாக இருக்கும் என தெரிவித்த அவர், இந்திய மக்கள் அனைவரும் அதை விரும்புவார்கள் என கூறியுள்ளார்.
2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

News June 5, 2024

தந்தையை தோற்கடித்தவரை வீழ்த்திய மகன்

image

உ.பி மாநிலம் கௌஷாம்பி தொகுதியில் 25 வயதே ஆன இளம் சமாஜ்வாதி வேட்பாளர் புஷ்பேந்திர சரோஜ், பாஜக வேட்பாளர் வினோத் குமார் சோங்கரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். இதில் சுவாரசியம் என்னவென்றால், புஷ்பேந்திர சரோஜின் தந்தையான முன்னாள் அமைச்சர் இந்தர்ஜித் சரோஜ், 2019 மக்களவைத் தேர்தலில், பாஜகவின் வினோத் குமார் சோங்கரிடம் தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News June 5, 2024

இதுமட்டும் நடந்தால் “பதவி விலகுவேன்” : அண்ணாமலை

image

மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த அண்ணாமலையை திமுகவின் கனிமொழி விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “என் தந்தை முதலமைச்சரோ, எம்எல்ஏவோ கிடையாது. குப்புசாமி!, ஆடு மாடு மேய்த்தார். என்னிடம் பொறுமையாக செல் என அறிவுரை கூறியுள்ளார். ஒருவேளை கனிமொழி பாஜகவில் இணைந்தால் “நான் பதவி விலகுவது” குறித்து பரிசீலனை செய்கிறேன் என அண்ணாமலை பதிலளித்தார்.

News June 5, 2024

பாசிச அரசுக்கு எதிராக போராடுவோம்: கார்கே

image

மோடி தலைமையிலான பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக INDIA கூட்டணி தொடர்ந்து போராடும் என காங்., கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். INDIA கூட்டணி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய அவர், பாஜக ஆட்சி செய்யக்கூடாது என விரும்பிய மக்களின் விருப்பத்தை உணர்ந்து, உரிய நேரத்தில் தகுந்த முடிவெடுப்போம் என்றார். மேலும், இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!