News June 6, 2024

திமுக அளித்த வாக்குறுதிகள் என்னவாகும்?

image

தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வென்றுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, விவசாயக் கடன், மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு, NHஇல் சுங்கச் சாவடிகள் அகற்றம் போன்றவை இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த வாக்குறுதிகள் என்னவாகும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

News June 6, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News June 6, 2024

கூட்டணி ஆட்சி நடத்துவதில் அனுபவம் உள்ளது

image

கூட்டணி ஆட்சியை வழி நடத்துவதில் பாஜகவுக்கு அனுபவம் இருப்பதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது மிகப்பெரிய சாதனை எனத் தெரிவித்துள்ளார், மேலும், இந்தியாவில் 20க்கும் அதிகமான கட்சிகளுடன் கூட்டணி ஆட்சியை முழுமையாக 5 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக நடத்திய கட்சி பாஜக தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

News June 6, 2024

4000 ரன்களை கடந்தார் ரோஹித் ஷர்மா

image

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 4000 ரன்களை கடந்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் 37 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் அவரும் இணைந்துள்ளார்.

News June 6, 2024

பாஜக ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம்: திருமாவளவன்

image

5 ஆண்டுகள் பாஜக ஆட்சி நீடிக்குமா என்பது கேள்விக்குறியே என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பை காக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறிய அவர், என்டிஏ பெரும்பான்மையை பெற்றிருந்தாலும், மக்கள் தீர்ப்பு மோடிக்கு எதிராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நிதிஷ், சந்திரபாபு நாயுடு மற்றும் ஏக்நாத் ஷிண்டே தங்களின் முடிவுகளை மாற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

News June 6, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூன் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News June 6, 2024

காதலனுடன் அமெரிக்காவில் பிரியா பவானி சங்கர்

image

நடிகை பிரியா பவானி சங்கர், தனது காதலனுடன் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். தற்பொழுது அவருடன் ஜாலியாக சிட்னி நகரில் சுற்றி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், சிட்னியை தனது 2ஆவது வீடாக கருதுவதாகவும், 6 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு வருவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

News June 6, 2024

பிரியாவிடை விருந்தில் பங்கேற்ற மோடி

image

மக்களவைத் தேர்தலில் NDA கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, மோடி 3ஆவது முறையாக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, அமைச்சரவைக்கான பிரியாவிடை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா, மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 5, 2024

அண்ணாமலைக்கு தண்டனை கிடைக்கும்: எஸ்.வி.சேகர்

image

அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் நடவடிக்கையால் 13 இடங்களில் பாஜகவுக்கு டெபாசிட் பறிபோனதாக குற்றம் சாட்டிய அவர், அண்ணாமலைக்கு அதற்கான தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் பாஜகவின் 14% வாக்கு என்பது வளர்ச்சி அல்ல என்றும், அது அசிங்கமானது எனத் தெரிவித்துள்ளார்.

News June 5, 2024

சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்

image

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவரும் NDA மற்றும் INDIA கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றிருந்தனர். விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துகளை தெரிவித்தார்.

error: Content is protected !!