India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்கு உகந்த நாள். இன்றைய நாளில் கோயிலுக்குச் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்குவது பல்வேறு நற்பலன்களை பயக்கும் என்பது ஐதீகம். கோயிலுக்குச் செல்ல முடியாதோர் மனதில் யாரை வேண்டுமானாலும், குருவாக நினைத்து அவர்களை வழிபடலாம். இதேபோன்று, தொடர்ந்து 11 வாரங்கள் வழிபாடு செய்து வருவதால், நாள்பட்ட துன்பங்கள், கடன் தொல்லைகள் விலகி ஓடும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
இந்தியா-அயர்லாந்து இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில், பல்வேறு சாதனைகள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மா 300 வெற்றிகளை பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் 300 வெற்றிகளைப் பதிவு செய்த 3ஆவது இந்திய அணி வீரர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார். இதற்கு முன், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் 300 வெற்றிகளை பூர்த்தி செய்துள்ளனர்.
சீமான் ஒரு பிரிவினைவாதி என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 8% வாக்குகளுக்கு மேல் கிடைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஏமாந்த இளைஞர்கள் நாதகவுக்கு வாக்களிப்பது மிகவும் ஆபத்தான விஷயம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் சீமான் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
உலகக் கோப்பை T20 கிரிக்கெட் தொடரின் 9ஆவது லீக் போட்டியில் இன்று பப்புவா நியூ கினியாவை உகாண்டா அணி எதிர்கொள்கிறது. Providence மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா அணி கேப்டன் பிரையன் மஸபா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். C பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும், இதுவரை ஒரு போட்டியில் விளையாடி தோல்வியை கண்டுள்ளன. இதனால், இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியமானதாக இருக்கும்.
▶ஜூன் – 6 ▶வைகாசி – 24 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM வரை ▶கெளரி நல்ல நேரம்: 11:30 AM – 12:30 AM, 06:30 PM – 07:30 PM வரை ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM வரை ▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM வரை ▶குளிகை: 06:00 PM – 07:30 PM வரை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶ திதி: அமாவாசை
மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் ஏற்பார்களா? குறிப்பாக, ஒற்றைத் தலைமையாக உள்ள இபிஎஸ், மனம் மாறிச் செல்வாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய முதல் போட்டியிலேயே, இந்திய அணி பவுலர்கள் பல சாதனைகளை புரிந்துள்ளனர். அந்த வகையில், ஒரு ஓவர் வீசி 3 ரன்கள் விட்டுக்கொடுத்த அக்ஷர் படேல், ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் T20 போட்டிகளில் caught & bowled முறையில் 50 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இதேபோல, 3 ஓவர்கள் வீசி 6 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், INDIA கூட்டணி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டார். அப்போது ராகுல் காந்தியுடன் அமர்ந்திருந்த புகைப்படத்தை தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், எனது அன்பு சகோதரனுடன் என கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் ஹார்டின் சிம்பலுடன் #BrotherGoals எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை ரசாயனங்கள், நிறமிகள் கலந்த உணவுகள் ஆபத்தானவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகளை கவர்வதற்காக நொறுக்குத் தீனிகளில் அதிகப்படியான ரசாயனங்களும், நிறமிகளும் சேர்க்கப்படுவதாகவும், இவற்றை அதிகப்படியாக உட்கொள்ளும் போது, சருமம் தொடங்கி சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிப்புக்குள்ளாகும் எனவும் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் மே 31ஆம் தேதி நிலவரப்படி, 53.48 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 24.63 லட்சம் ஆண்களும், 28.85 லட்சம் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 281 பேரும் அரசு வேலைக்காக பதிவு செய்துவிட்டு காத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதில், 7810 பேர் 60 வயதை கடந்தவர்கள்.
Sorry, no posts matched your criteria.