India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் மார்ச் 16ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் இன்று (ஜூன் 6) நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் ₹50,000-க்கு மேல் பணம், பொருள்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது.
பப்புவா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், உகாண்டா அணிக்கு 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் ஆடிய பப்புவா அணி, உகாண்டாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே தடுமாறி வந்தது. இதனால், 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு, பப்புவா அணி 77 ரன்கள் மட்டுமே குவித்தது. அபாரமாக பந்துவீசிய, ராம்ஜானி, மியாகி, ஃப்ராங்க், கியூட்டா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தேர்தலில் இனிமேல் போட்டியிட மாட்டேன் என, திருச்சூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் தடாலடியாக அறிவித்துள்ளார். அந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். முரளிதரன் 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பம் வெடித்த நிலையில், மூத்த நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் என கேரள இளைஞர் காங்கிரஸார் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் ராகுல் காந்தி, எதனை விட்டுக் கொடுப்பது என்ற இக்கட்டான சூழலில் உள்ளார். ரேபரேலி, காந்தி பெயர் கொண்டவர்களின் குடும்பத் தொகுதியாக மாறிவிட்டது. ஆனால், கடந்த தேர்தலில் அமேதி கைவிட்டபோது வெற்றி பெறச் செய்து தூக்கிவிட்டவர்கள் வயநாடு மக்கள். எதனை விட்டுக் கொடுக்கப் போகிறார் ராகுல்?
அஷ்டாஷ்டகர்களில் பொன் சொரியும் ஆதிசக்தி ஸ்ரீசுவர்ண ஆகர்ஷண பைரவ மூர்த்தி அருட்குணம் கொண்டவர் என்று மந்திரநூல்கள் போற்றுகின்றன. இத்தகு பைரவர் வீற்றிருக்கும் திருத்தலம் குடந்தை செம்பியவரம்பலில் மட்டுமே உள்ளது. ஆனி தேய்பிறை அஷ்டமி நாளில் இக்கோயிலுக்கு சென்று, செஞ்சந்தனகாப்பு செய்து, பூசணி தீபமேற்றி, மிளகு வடை படைத்து வழிபட்டால் நிலம் & சொத்து தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
தேர்தல் தோல்வியால் வெட்கப்பட எதுவும் இல்லை என ஒடிஷா Ex CM நவீன் பட்நாயக் கூறியுள்ளார். முதல்முறை, முதல்வரானபோது 70% மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்ததாகவும், அது தற்போது 10%ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், விவசாயம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் மேற்கொண்ட முயற்சியே இந்த சாதனைக்கு காரணம் எனக் கூறியுள்ளார். அவரது வலதுகரமாக தமிழர் V.K.பாண்டியன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. நியூ யார்க்கில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் Gareth Delany 26 ரன்கள் எடுத்தார். IND தரப்பில் ஹர்திக் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய IND அணி, 12.2 ஓவர்களில் 97/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டிகளில், அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற சாதனையை இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். இதுவரை 55 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ள அவர், 42 போட்டிகளில் வெற்றிவாகை சூடி இந்த சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார். இதன் மூலம், 72 போட்டிகளில் விளையாடி 41 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்த முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை ரோஹித் முறியடித்துள்ளார்.
*மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது குறித்து ஜூன் 7இல் முடிவு: NDA கூட்டணி.
*தொடர் தோல்வி காரணமாக மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்தது பாமக.
*முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு ஜூன் 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: கல்வித்துறை
*நடிகர் பிரேம்ஜிக்கு ஜூன் 9ஆம் தேதி திருமணம்: வெங்கட் பிரபு தகவல்
*உலகக் கோப்பை T20 தொடர்: அயர்லாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி.
Sorry, no posts matched your criteria.