India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜகவின் வீழ்ச்சிக்கு யூடியூபர் ஒருவர் காரணமாக இருப்பதாக எதிர்க்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஆம், அவரது பெயர் துருவ் ராதி. யூடியூபரான அந்த இளைஞர், தேர்தலுக்கு முன் பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பல கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனாலும் அவருடைய முயற்சி வெற்றியையே தந்திருக்கிறது.
2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில், இன்று இந்தியா-குவைத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெறுகிறார். அதனால், அவரை வெற்றியுடன் வழியனுப்ப இந்தியா முனைப்புடன் உள்ளது. ஜூன் 11ம் தேதி இன்னொரு தகுதிச்சுற்று போட்டி எஞ்சியுள்ளது. ஆனால், சொந்த மண்ணில் ஓய்வுபெற வேண்டுமென்பதால் அவர் இன்றைய ஆட்டத்துடன் ஓய்வு பெறுகிறார்.
ஆந்திராவின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, இந்த வாரமே பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி 8ஆம் தேதி பதவியேற்கவுள்ளதால், தனது பதவியேற்பு விழாவை அவர் ஒத்தி வைத்திருக்கிறார். ஜூன் 12ஆம் தேதி ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, பிரதமர் பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு அதிமுக தொண்டர்களை பழக்குவது பாவக்காரியம் என்று ஓபிஎஸ் வேதனையுடன் கூறியுள்ளார். ஆட்சியையும் கட்சியையும் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம் எனக் கூறிய அவர், வெற்றியைப் பெற மனமாட்சியம், கருத்து வேற்றுமைகளை மறந்து ஒன்றாக வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓபிஎஸ்ஸுக்கே 2ஆவது இடம்தான் கிடைத்தது என்பது கவனிக்கத்தக்கது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுத்துள்ள நடிகர் மோகனின் ‘ஹரா’, விதார்த், வாணி போஜன், ரகுமான் நடித்துள்ள ‘அஞ்சாமை’, வசந்த் ரவி, சத்யராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வெப்பன்’ மற்றும் புது முகங்கள் நடித்திருக்கும் ‘எலிசாமி’ ஆகிய 4 திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. அதேபோல், யோகி பாபு நடித்துள்ள ‘பூமர் அங்கிள்’ ஆஹா ஓடிடியிலும், ‘அரண்மனை 4’ ஹாட்ஸ்டாரிலும் நாளை வெளியாகவுள்ளன.
மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுக்க ஒன்றிணைய வேண்டுமென அக்கட்சியின் தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அறைகூவல் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்ஜிஆர், ஜெயலலிதா கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கத்தை காக்க வேண்டிய கடமை அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்களுக்கு இருக்கிறது. தோல்வியில் இருந்து இயக்கத்தை மீட்க ஒன்றிணைவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார். சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட அவருக்கு, கோயில் அறங்காவலர் குழு சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. சமீபத்தில் சிம்பொனி ஒன்றை 35 நாட்களில் எழுதி முடித்த அவர், ரஷ்ய இசைக் கலைஞர்களை வைத்து மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
PAK-க்கு எதிரான T20 உலகக் கோப்பை போட்டியில், ரோஹித் ஷர்மா பங்கேற்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். IRE-க்கு எதிரான நேற்றைய போட்டியில், கையில் ஏற்பட்ட காயம் காரணமாகப் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். போட்டி முடிந்த பின் பேசிய அவர், இன்னும் வலி இருப்பதாகத் தெரிவித்தார். அடுத்த போட்டிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், காயத்தில் இருந்து மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர ஃபட்னவிஸ் ராஜினாமா செய்த நிலையில் அதனை ஏற்க முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மறுத்துள்ளார். மஹாராஷ்டிராவில் பாஜக 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பொறுப்பேற்று அரசுப் பதவியில் இருந்து விலகுவதாக ஃபட்னவிஸ் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், தேர்தல் தோல்விக்கு அனைவருமே பொறுப்பு என்று ஷிண்டே அதனை ஏற்க மறுத்திருக்கிறார்.
பப்புவா அணிக்கு எதிரான T20 உலகக் கோப்பை போட்டியில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உகாண்டா அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய பப்புவா, 76 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய உகாண்டா, தொடக்கத்தில் தடுமாறி வந்தாலும் பின்னர் நிதானமாக விளையாடி வந்தது. ரிஷாத் அலி ஷா, 33 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். இது, டி20 உலகக் கோப்பையில் உகாண்டா பதிவு செய்யும் முதல் வெற்றியாகும்.
Sorry, no posts matched your criteria.