News June 6, 2024

அஜித் பவாரிடம் இருந்து விலக 19 எம்.எல்.ஏ.,க்கள் முடிவு!

image

மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் NDA கூட்டணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவால் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சரத் பவாரிடம் இருந்து பிரிந்து சென்று, பாஜக கூட்டணி அரசு உருவாக காரணமாக இருந்தவர் அஜித் பவார். அவரது அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் மனமாற்றம் அடைந்த அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் மீண்டும் சரத் பவாரிடமே செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News June 6, 2024

எதிர்க்கட்சித் தலைவராகிறார் ராகுல் காந்தி?

image

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் மக்களவை குழுத் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுக்க மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாணிக்கம் தாக்கூர், விவேக் தங்கா வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 6, 2024

அயோத்தி மக்கள் துரோகிகள்: நடிகர் சுனில் லஹேரி

image

ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத்தில் பாஜக தோல்வி அடைந்ததையடுத்து, ‘ராமாயணம்’ டிவி தொடரில் லக்‌ஷ்மணனாக நடித்த சுனில் லஹேரி அத்தொகுதி மக்களை வசை பாடியுள்ளார். வனவாசம் சென்று வந்த சீதையை சந்தேகப்பட்ட அயோத்தியை சேர்ந்த அதே மக்கள்தான் இவர்கள் எனவும், அயோத்தியின் மக்கள் தங்கள் மன்னனுக்கு எப்போதும் துரோகம் செய்பவர்கள் என்பதற்கு வரலாறே ஆதாரம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

News June 6, 2024

தேமுதிக பொய் குற்றச்சாட்டு கூறுகிறது: மாணிக்கம் தாகூர்

image

விருதுநகரில் ஓய்வுப்பெற்ற நீதிபதி முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரும் தேமுதிகவின் கோரிக்கை தவறானது என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடத்தில் தான் நள்ளிரவு வரை அத்தொகுதிக்கான பொறுப்பாளர் ராஜேந்திர பாலாஜி, விஜய பிரபாகரன் இருந்தனர். அப்போது எதிர்க்காமல், அமைதியாக சென்றது ஏன்? பிரேமலதா கூறும் பொய் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்றார்.

News June 6, 2024

மாநில அரசுகளுக்கான வெற்றி: அரசியல் விமர்சகர்கள்

image

பெரும்பான்மை இல்லாமல், மாநிலக் கட்சிகளை நம்பி பாஜக ஆட்சியமைப்பது, மாநில அரசுகளுக்கான வெற்றி என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மாநில அரசுகளுக்கு முன்பு இருந்த குடைச்சல் குறையும் எனவும், பாஜகவால் முன்பு போல் மாநில அரசுகளை எளிதாக அணுக முடியாது என்றும் கூறுகின்றனர். இந்துத்துவா செயல்திட்டத்தை புகுத்துவது, மாநிலக் கட்சிகளை ஒடுக்குவது போன்றவற்றை சந்திரபாபு விரும்ப மாட்டார் எனத் தெரிவிக்கின்றனர்.

News June 6, 2024

OPS அணியில் இருந்து வெளியேறினார் KP.கிருஷ்ணன்

image

“ஓபிஎஸ் தேற மாட்டார் என்று தெரிந்ததால் அவரிடம் இருந்து விலகியிருக்கிறேன்” என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் விமர்சித்திருக்கிறார். அதிமுக பிரிவுக்குப் பின் ஓபிஎஸ்-உடன் நெருக்கமாக இருந்த முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவர். ஆனால், ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிட்டது பிடிக்காமல் விலகியிருக்கிறார். அதிமுக மீண்டும் ஒன்றிணைவதுதான் கட்சி வெற்றிபெற ஒரே தீர்வு என்று அவர் பேட்டியளித்திருக்கிறார்.

News June 6, 2024

ஜூன் 21இல் ரீ-ரிலீஸ் ஆகும் ‘போக்கிரி’

image

விஜய் நடித்த ‘போக்கிரி’ திரைப்படம், வரும் 21ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கனகரத்னா மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 22ஆம் தேதி விஜய் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனைக் கொண்டாடும் வகையில், ஒருநாள் முன்னதாக விஜய்யின் படங்களை தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அந்தவகையில், ‘துப்பாக்கி’ படத்தைத் தொடர்ந்து, ‘போக்கிரி’ படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது.

News June 6, 2024

தோல்வி அடையவில்லை; தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்

image

விருதுநகரில் விஜய பிரபாகரனை திட்டமிட்ட சூழ்ச்சியால் வீழ்த்தியுள்ளனர் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பின் 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை ஆட்சியர் நிறுத்தியதாகக் கூறிய அவர், மறு வாக்கு எண்ணிக்கை கோரியதை தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை என்று சாடினார். அத்துடன், ஆட்சியருக்கு அழுத்தம் கொடுத்தது யார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

News June 6, 2024

மறுவாக்கு எண்ணிக்கை கோரும் தேமுதிக

image

விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “13ஆவது சுற்றுக்குப் பின் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. ஆட்சியரே வந்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தத் சொல்லி இருக்கிறார். அங்கு நடந்த குளறுபடிகள் குறித்து புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

News June 6, 2024

‘செட்’ தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

image

தொழில்நுட்பக் காரணங்களால் ‘செட்’ தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாளை, நாளை மறுதினம் நடைபெறவிருந்த ‘செட்’ தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியிட சேர்க்கைக்காக ‘செட்’ தேர்வு நடத்தப்படுகிறது.

error: Content is protected !!