India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிஏஏ சட்டத்திற்கு எதிராக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நடிகை நிமிஷா சஜயன், “திருச்சூரைக் கூட தராத நாங்கள், இந்தியாவை பாஜகவிடம் தந்துவிடுவோமா?” என பேசியிருந்தார். திருச்சூரில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி இருமுறை தோல்வியுற்றதை அவர் மறைமுகமாக சாடியிருந்தார். இந்நிலையில், சுரேஷ் கோபி தற்போது வெற்றிபெற்றுள்ளதை குறிப்பிட்டு, பாஜக தொண்டர்கள் அவரை இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
உட்கட்சி தலைவர்களை விமர்சிக்கும் பாஜக ஐடி விங் மற்றும் அண்ணாமலை வார் ரூம் குழுக்களுக்கு தமிழிசை பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னை பற்றி அவதூறு பரப்பும் பாஜக இணையதளவாசிகள் மீது, முன்னாள் தலைவர் என்ற முறையில் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் பாஜகவுக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கை, ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் டிவிஷன் அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. முன்னதாக, சவுக்கு சங்கர் மீது காவல்துறையினருக்கு எந்த தனிப்பட்ட பகைமை உணர்வும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ள காவல் ஆணையர், அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா அளவு வணிக அளவில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கு பிறகு அலகாபாத் தொகுதியில் காங்கிரஸ் வென்றுள்ளது. இத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸை சேர்ந்த உஜ்வல் ராமன் சிங் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், பாஜக வேட்பாளர் நீரஜ் திரிபாதியை வென்றுள்ளார். இத்தொகுதியில் கடைசியாக 1984இல் காங்கிரஸ் சார்பாக நடிகர் அமிதாப் பச்சன் வெற்றி பெற்றிருந்தார். முன்னாள் பிரதமர் சாஸ்திரி 1957 மற்றும் 1962 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றார்.
தெலுங்கு தேசம் கட்சிக்கு சபாநாயகர் பதவி வழங்க பாஜக மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவை சேர்ந்த ஒருவருக்கு சபாநாயகர் பதவியை வழங்குவதில் அமித் ஷா மற்றும் நட்டா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் சபாநாயகர் பதவி மீது ஆர்வம் காட்டி வருகின்றன. எம்பிக்களை பதவி நீக்கம் செய்வதில், சபாநாயகரே இறுதி முடிவு எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் மற்றும் புதிய கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் தவெக என ஐந்து முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது.
எக்ஸ் (X) தளத்தில் ஆபாச பதிவுகளை பதிவிடும் புதிய அப்டேட்டால், பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஒருவரை துன்புறுத்தும் காட்சிகள், அனுமதியின்றி வற்புறுத்தும் காட்சிகள், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பாதிக்கும் பதிவுகள் அனுமதிக்கப்படாது என்றும், ஆபாசமான புகைப்படங்களை ப்ரொஃபைல் பிக்-ஆக வைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், இந்த பதிவுகளை பார்க்க முடியாது.
கமல் நடித்த இந்தியன் திரைப்படம், நாளை உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக முதல் பாகத்தை ரசிகர்களுக்கு நினைவுகூறும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது. இந்தியன் 2 வெளியீட்டிற்கு பிறகு, அடுத்த 3 மாதங்களில் இந்தியன் 3 வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட மூதாட்டி இறுதி சடங்கின்போது பிழைத்து எழுந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நெப்ராஸ்கா மாகாணத்தை சேர்ந்த கிளாண்ட்ஸ் (74) முதுமை காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, ஆதரவற்றோர் இல்லத்தில் அவருக்கு இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடந்த போது, அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, சிகிச்சை அளித்த நிலையில், அவர் நலம் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (மாலை 6 மணி வரை) 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், திருப்பூர், கோவை, தேனி, தி.மலை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.