India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படுதோல்வியடைந்தார். இதையடுத்து, திமுகவினர் மட்டன் (ஆடு) பிரியாணி விருந்து கொடுத்தனர். இந்நிலையில், திமுகவினர் ஆட்டை கொடூரமாக வெட்டி, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக விமர்சித்த அண்ணாமலை, திமுகவினருக்கு என் மீது கோபம் இருந்தால் ஆட்டை வெட்ட வேண்டாம், என் மீது கை வைக்கலாம் என சவால் விடுத்துள்ளார்.
கர்நாடக அமைச்சர் ராகவேந்திரா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மகரிஷி வால்மிகி பழங்குடியின வளர்ச்சி வாரியத்தின் ₹88.62 கோடி முறைகேடாக பிற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு, அதிகாரி சந்திரசேகரன் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ராகவேந்திராவுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திணிக்கப்பட்ட கருத்துக்கணிப்பு விவரங்கள், பாஜக தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்துக்கணிப்புகளை வைத்து பங்குச்சந்தையில் ₹38 லட்சம் கோடி அளவில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பங்குச்சந்தை மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒடிஷாவில் ஆட்சியை இழந்ததை எண்ணி, பி.ஜே.டி., தொண்டர்கள் வெட்கப்பட தேவையில்லை என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். பி.ஜே.டி., எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய அவர், “பிஜேடி கட்சி 24 ஆண்டுகளாக ஒடிஷாவுக்கு சேவை செய்துள்ளது. நாம் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம். 70% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தனர். அதனை 10% ஆகக் குறைத்துள்ளோம்” என்றார்
இந்தி டிவி தொடர்களில் நடிக்கும் புதுமுக நடிகைகளை விலங்குகளைப் போலதான் நடத்துவார்கள் என்று நடிகை உர்ஃபி ஜாவேத் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் சேனல் ஒன்றில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அவர், பாலிவுட்டில் மட்டுமல்ல இந்தி தொடர்களில் பணிபுரிவது கூட மிகவும் கடினம் என்றும், ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட சம்பளத்தைக் கூட தருவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
2024 எம்.பி தேர்தலில் 280 பேர் முதல் முறையாக எம்பிக்களாக தேர்வாகியுள்ளனர். 2019 தேர்தலில் 263 பேர் தேர்வான நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. மேலும், ஒருவர் 8ஆவது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்பியாக தேர்வாகி உள்ளார். 9 பேர் பிற கட்சிக்கு மாறிச் சென்று எம்பியாகியுள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட 53 அமைச்சர்களில் 35 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் இன்று இரவோடு விலக்கிக் கொள்ளப்படுகிறது. இதனையடுத்து, கிடப்பிலிருக்கும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தலில் மக்கள் அளித்த அமோக வெற்றிக்கு பரிசாக பல புதிய திட்டங்களை அறிவிக்கவும் திமுக அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில், 2026இல் அதிமுகவுடன் கூட்டணி உண்டா?, இல்லையா? என்பதை டெல்லி பாஜக தலைமை தான் முடிவு செய்யும் எனக் கூறிய தமிழிசை, அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தால் திமுகவுக்கு தற்போது கிடைத்துள்ள இடங்கள் கிடைத்திருக்காது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் எனவும் அண்ணாமலை கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இபிஎஸ் குறித்தும், எஸ்.பி.வேலுமணி குறித்தும் பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை என அதிமுக ஐ.டி.விங் பதிலடி கொடுத்துள்ளது. ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத அதிமுக, பாஜவுடன் சேர்ந்தால் மட்டும் எப்படி வெற்றிபெறும் என அண்ணாமலை கூறிய நிலையில், ஆடு, ஓநாய், நரி என எது வந்தாலும் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது என ஐ.டி.விங் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
சிஏஏ சட்டத்திற்கு எதிராக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நடிகை நிமிஷா சஜயன், “திருச்சூரைக் கூட தராத நாங்கள், இந்தியாவை பாஜகவிடம் தந்துவிடுவோமா?” என பேசியிருந்தார். திருச்சூரில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி இருமுறை தோல்வியுற்றதை அவர் மறைமுகமாக சாடியிருந்தார். இந்நிலையில், சுரேஷ் கோபி தற்போது வெற்றிபெற்றுள்ளதை குறிப்பிட்டு, பாஜக தொண்டர்கள் அவரை இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.