India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கிரசில் 99 எம்பிக்கள் இருக்கும் நிலையில் சுயேச்சை MP ஒருவர் காங்கிரசில் இணைந்ததன் மூலம் மொத்த MP.,க்கள் எண்ணிக்கை 100 ஆனது. மகாராஷ்டிராவில் காங்., கட்சியைச் சேர்ந்த விஷால் பாட்டீல் என்பவருக்கு கட்சியில் சீட் மறுக்கப்பட்டது. இதையடுத்து, சுயேச்சையாக நின்று சிவ சேனா (உத்தவ் அணி) வேட்பாளரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்த வெற்றியையடுத்து மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார்.
பங்குச்சந்தையில் ஊழல் நடைபெற்றதாக ராகுல் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு ஆதாரமில்லாதது என பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளருக்கு அச்சத்ததை ஏற்படுத்தும் வகையில் ராகுல் பேசியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, ஜூன் 4இல் பங்கு சந்தையில் ₹38 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக கூறி, விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் வலியுறுத்தியிருந்தார்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து மே 10ஆம் தேதி முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலரை CISF சஸ்பெண்ட் செய்துள்ளது. விமான நிலையத்துக்கு வந்த கங்கனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் காவலர் அவரை கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து, பெண் காவலருக்கு எதிராக CISF தரப்பில் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் குறித்து தவறாக பேசியதற்காக கங்கனாவை அந்த காவலர் அறைந்தது குறிப்பிடத்தக்கது.
கனடாவை சேர்ந்த பெண்ணுக்கு ஆல்கஹால் சுரக்கும் நோய் கண்டறியப்பட்டுள்ளது. 50 வயதான அந்த பெண், தனக்கு மது குடித்ததை போன்று போதை உணர்வு இருப்பதாக மருத்துவரை அணுகியுள்ளார். பரிசோதனையில் அவரது ரத்தத்தில் லிட்டருக்கு 62 மில்லிமோல் ஆல்கஹால் இருந்துள்ளது. ஆனால், அவருக்கு மது பழக்கம் இல்லாததால் மருத்துவர்கள் குழப்பமடைந்தனர். ஆய்வில், அவருக்கு ஆல்கஹால் சுரக்கும் அரிய வகை நோய் இருப்பது தெரியவந்துள்ளது.
₹2000 கோடி மதிப்பிலான பங்கு பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 11இல் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை இந்த ஏலம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏலத்தில் கலந்துகொண்டு, தேவையான பங்குகளை விருப்பத்தின் அடிப்படையில் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NDA கூட்டணியில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்திய மத்திய விமான போக்குவரத்து துறை & மத்திய எஃகு அமைச்சகத்தை வழங்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் உள்துறை, பாதுகாப்புத்துறை, வெளியுறவு, ரயில்வே, சாலைப் போக்குவரத்து, சட்டம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளை கூட்டணி கட்சிகளுக்கு வழங்காமல், தக்கவைக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி (ஆம் ஆத்மி மற்றும் காங்.,) டெல்லியில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி இல்லை, ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்று டெல்லி அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல் கட்சியாக ஆம் ஆத்மி கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.
ஓபிசி, தலித், முஸ்லிம்களின் வாக்குகள் பாஜகவுக்கு செல்லாதபடி, அகிலேஷ் சாதுர்யமாக காய் நகர்த்தினார். பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், அரசியலமைப்பு மாற்றப்படும் என முதலில் கூறியது பாஜக வேட்பாளர் லல்லு சிங்தான். அதை கேடயமாக பயன்படுத்திய அகிலேஷ், பாஜக 400 தொகுதிகளில் வென்றால் ஓபிசி, தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை பறித்து விடுவார்கள் என பிரசாரம் செய்தது தேர்தல் முடிவில் எதிரொலித்துள்ளது.
உ.பி. மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில், சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத், பாஜகவின் லல்லு சிங்கை தோற்கடித்து அதிர்ச்சி அளித்துள்ளார். இதற்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அயோத்தி வளர்ச்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு கிடைக்காததால், உள்ளூர் மக்களிடையே பாஜக மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.