India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பெறும் பணி நேற்றோடு நிறைவு பெற்றது. அவற்றை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மொத்தமாக 2,48,848 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.
நடிகர் அருண் விஜய் நடித்த வணங்கான் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் தனது திரையுலக வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமையும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். அத்துடன் இப்படத்தின் ரிலீசுக்கு பிறகு அவர் தனது சம்பளத்தை ₹8 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வணங்கானை மலைபோல நம்பியிருக்கும் அவர், தற்போது ₹5 கோடி சம்பளம் வாங்குவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக பாஜக தலைவராகப் பதவியேற்றார் அண்ணாமலை. பாஜகவின் தேசியக் கொள்கைகளின்படி 3 ஆண்டுகள் மட்டுமே தலைவராக நீடிக்க முடியும். அந்த வகையில், அடுத்த மாதம் அண்ணாமலையின் தலைவர் பதவி நிறைவடையவுள்ளது. மீண்டும் அவர் தலைவராகத் தேர்வு செய்யப்படுவாரா, அல்லது புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) காலியாக உள்ள 487 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரி (Scale I, II, III), அலுவலக உதவியாளர் பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, +2, Degree. வயது வரம்பு: 18-42. சம்பள வரம்பு: ₹25,000 – ₹80,000/-. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 27. மேலும் தகவல்களுக்கு <
மாணவர்களின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை வாட்ஸ் அப் வழியாக பெற்றோருக்கு தெரியப்படுத்த, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் இதுவரை 1.02 கோடி செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள பள்ளிக் கல்வித்துறை எஞ்சியுள்ள பெற்றோரின் செல்போன் எண்கள் பள்ளிகள் திறக்கும் முன்பாக சரிபார்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் படம் வெற்றி பெற்றதையடுத்து இந்தியன் 2 படம் எடுக்கப்பட்டது. ஆனால் பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2, இந்தியன் 3 படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக சங்கருக்கு தயாரிப்பு நிறுவனம் சம்பளம் தரவில்லை, அந்நிறுவன நிதிநிலையை புரிந்து கொண்டு சங்கரும் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.
வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் 2023 ஜுன் 13இல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து சுமார் ஓராண்டாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை. அறுவை சிகிச்சை செய்ததால் தினமும் 11 மாத்திரை எடுப்பதாகவும், சிறை செல்லும் போது 73 கிலோ உடல் எடை இருந்தவர் தற்போது 8 கிலோ குறைந்து விட்டதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லியோ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இந்தநிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 23வது படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்து வருகிறார். இருவருக்கும் இடையிலான சண்டை காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். செப்டம்பர் மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்தியாவுக்கான தூதரை நேபாள அரசு திரும்ப பெற்றுள்ளது. நேபாள காங்கிரஸ், ஜனதா சமாஜ்பாடி கட்சி ஆட்சியில் நியமிக்கப்பட்ட தூதர்களை புதிய பிரதமர் பிரசண்டா தலைமையிலான அரசு திரும்ப பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட 11 நாடுகளில் பணியாற்றிய தூதர்களை அந்நாட்டு அரசு திரும்ப அழைத்துள்ளது. விரைவில் புதிய தூதர்களை நேபாள அரசு நியமிக்க உள்ளது.
நடிகர் தனுஷ் பெண்ணாக இருந்திருந்தால், தான் அவரை காதலித்து திருமணம் செய்திருப்பேன் என்று நடிகர் ஸ்ரீகாந்த் நகைச்சுவையாக கூறியுள்ளார். தனியார் எஃப்.எம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “நல்ல கதையை தேர்ந்தெடுப்பதில் நடிகர் தனுஷை யாராலும் விஞ்ச முடியாது. அவரது நடிப்பைப் பார்த்து நான் பொறாமைப்பட்டிருக்கிறேன். திறமைதான் அவரை பாலிவுட், ஹாலிவுட் வரை கொண்டு சேர்த்தது” எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.