India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விரும்பிய போது, அவர் நேரம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மோடியை சந்திக்க நேரம் பெற்றுத் தரும்படி பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலிடம் அவர் தரப்பு கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காக சந்திக்க விரும்புகிறார் எனத் தெரியவில்லை.
PAK-க்கு எதிரான 11ஆவது லீக் போட்டியில் USA அணியின் வெற்றிக்கு இந்திய வம்சாவளி வீரர் சவுரப் நேத்ராவால்கர் முக்கிய பங்காற்றினார். 2010 ஐசிசி U-19 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடிய சவுரப் 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும், இறுதிப்போட்டியில் இந்தியா அணி PAK-அணியிடம் தோல்வியடைந்தது. 14 ஆண்டுகள் கழித்து அதற்கு பழிவாங்கும் விதத்தில், PAK அணியை சூப்பர் ஓவரில் அவர் வீழ்த்தினார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடிய விசிக, உள்ளாட்சித் தேர்தல் குறித்து புதுத் திட்டம் வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக என எந்த கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டாலும், அதிக இடங்களை கேட்க வேண்டும் என்றும், குறிப்பாக வடதமிழகத்தில் அதிக இடங்களை கேட்க அக்கட்சி திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பாலிவுட்டில் ரீல் ஜோடியாக நடித்த இருவர், மக்களவைக்கு ரியல் எம்.பி.க்களாக காலடி எடுத்து வைக்கவுள்ளனர். அதாவது, 2011இல் வெளிவந்த ‘மைலே நா மைலே ஹம்’ படத்தில் ஜோடியாக சிராக் பாஸ்வான் – கங்கனா ரனாவத் நடித்துள்ளனர். ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவுக்குப் பிறகு சிராக் எல்.ஜே.பியின் தலைவரானார். பாலிவுட்டில் நடித்துவந்த கங்கனா, அரசியல் ஆர்வம் காரணமாக பாஜகவில் இணைந்து, மண்டியில் போட்டியிட்டு வென்றார்.
நாடாளுமன்ற கட்டடத்திற்குள் சட்ட விரோதமாக மூன்று பேர் நுழைய முயன்றதால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காஸிம், மோஸின் & ஸோயப் ஆகியோர் 3ஆம் எண் கேட் வழியே நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் போலி ஆதார் அட்டையை காட்டியது தெரியவந்தது. இதனையடுத்து, அம்மூவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி இபிஎஸ் சேலத்தில் இருந்தார். முடிவு எப்படி இருக்கும் என ஓரளவு அவர் கணித்து இருந்ததாகவும், இதனால் சென்னையில் இருந்தால் தலைமைக் கழகம் சென்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என கருதி, ஜெயக்குமாரிடம் பதிலளிக்க வேண்டிய பொறுப்பை ஒப்படைத்து விட்டு அவர் சேலத்துக்கு சென்றதாகவும் அதிமுக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவின் புளோரிடா கடலோரப் பகுதியில் வளரும் சதுப்பு நிலத் தாவரமான கோனோகார்பஸ் தாவரம், தமிழகத்தின் பல்வேறு பூங்காக்கள், சாலைகளில் நடப்பட்டுள்ளன. இதில் பூக்கும் பூக்களில் இருந்து வெளியாகும் மகரந்த வாசனை, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்துவதாகவும், பூமிக்கு அடியில் உள்ள கேபிள்கள், குழாய்களை அதன் வேர்கள் சேதபடுத்துவதாகவும் இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜுன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று அவரை புகழ்ந்து பிரதமர் மோடி பதிவு வெளியிட்டு இருந்தார். தேர்தல் பிரசாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து விட்டு, அவர் இவ்வாறு புகழ்ந்து பதிவு வெளியிட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில், திமுகவின் ஆதரவை பெறலாம் என்ற முன்யோசனைத் திட்டத்துடனேயே மோடி இந்த பதிவை வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் ஜூலை மாதத்தோடு நிறைவு பெறுகிறது. எல்.முருகன் அந்தப் பதவியிலிருந்து விலகியவுடன் அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதேபோல, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அவர், மீண்டும் தலைவராவார் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடித்த அபிராமியை, ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைக்க, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்பே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.