News June 7, 2024

மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை: சிராக்

image

மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டுமென லோக் ஜன சக்தி கட்சி பாஜகவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை அக்கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக அரியணையில் அமர வைப்பது தான் தங்களது லட்சியம் எனக் கூறிய அவர், அமைச்சரவையில் எங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யும் முடிவு பிரதமரின் கைகளில் தான் உள்ளது என்றார்.

News June 7, 2024

வரலாற்று உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை

image

NDA கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியான நிலையில், இந்திய பங்குச்சந்தை வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. தேசிய குறியீட்டெண் நிஃப்டி, 2% வரை உயர்ந்து, 23,300 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதே போல, மும்பை குறியீட்டெண் சென்செக்ஸ் 2% உயர்ந்து, 76,750 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை எட்டியது. வங்கி, ஆட்டோ மொபைல், ஐடி உள்ளிட்ட அனைத்து துறை பங்குகளும் பெரும்பாலும் ஏற்றத்தில் நிறைவடைந்தன.

News June 7, 2024

சிறப்பு அந்தஸ்து கோரும் சந்திரபாபு, நிதிஷ்

image

NDA கூட்டணியில் அங்கம் வகித்துள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் பாஜகவுக்கு பல்வேறு கெடுபிடிகளை விதிப்பதாக கூறப்படுகிறது. அதில், முக்கியமானது தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்பதாகும். ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதாலும், பிஹாரில் இருந்து ஜார்க்கண்ட் பிரிக்கப்பட்டதாலும் அம்மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் சிறப்பு அந்தஸ்து கோரி வருகின்றனர்.

News June 7, 2024

பள்ளித் மாணவர்களுக்கு MTC அறிவுறுத்தல்

image

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் (MTC) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 2023 – 24 பயண அட்டை, பள்ளி அடையாள அட்டை வைத்திருந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். அதேபோல், பள்ளி சீருடையுடன் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பயிலும் பள்ளிகள் வரை கட்டணமின்றி பயணிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

News June 7, 2024

கருத்தரித்தல் மையங்களில் விதிமீறல்கள் நடக்கிறதா?

image

சில செயற்கை கருத்தரித்தல் மையங்கள் மனிதநேயத்திற்கு அப்பாற்பட்டு இயங்குகின்றன என தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் ₹6.97 கோடி மதிப்பீட்டில் அதிநவீன செயற்கை கருத்தரிப்பு மையத்தை திறந்து வைத்து பேசிய அவர், ஒரு சில தனியார் செயற்கை கருத்தரித்தல் மையங்களில் விதிமீறல்கள் நடைபெறுகின்றன. இதனை போக்கும் வகையில் அரசு மையங்கள் செயல்படும்” என்றார்.

News June 7, 2024

நாளை கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

image

எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது, தேர்தல் முடிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை டெல்லியில் கூடவுள்ளது. கார்கே தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக ராகுலை
தேர்வு செய்ய சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு, மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்., இம்முறை பெறவுள்ளது.

News June 7, 2024

ஜூன் 13 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

image

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர இதுவரை 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்கள் ஜூன் 12ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம் என்று அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது. ஜூன் 12ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, ஜூன் 13 முதல் 30ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும், ஜூலை 10ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

News June 7, 2024

‘குட் பேட் அக்லி’ முதல்கட்ட படப்பிடிப்பு இன்று நிறைவு

image

‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, இன்றுடன் நிறைவடையவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பில், 2 சண்டைக் காட்சிகளும், 1 குத்து பாடலும் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இம்மாத இறுதியில் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அஜித் இணையவுள்ளார்.

News June 7, 2024

ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார் மோடி

image

NDA கூட்டணி எம்.பி.,க்களின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி 3ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தன்னை ஆதரிக்கும் NDA கூட்டணி எம்.பி.க்களின் பட்டியலை அவர் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் சற்று நேரத்தில் அளித்து, ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரவுள்ளதாகக் கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணியின் தலைவர்களுடன் அவர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News June 7, 2024

ஆதாரை எளிதில் பதிவிறக்கம் செய்யும் வசதி

image

வங்கிக் கணக்கு, செல்போன் எண் உள்பட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த ஆதாரை நீங்கள் எளிதில் பதிவிறக்கம் செய்ய முடியும். இதற்கு நீங்கள் <>https://myaadhaar.uidai.gov.in/ genricDownloadAadhaar/en<<>> என்ற இணையதளம் சென்று, 12 இலக்க ஆதார் எண், OTP எண்ணை குறிப்பிட வேண்டும். இதை சரி செய்து உறுதி செய்தபிறகு, அது பதிவிறக்குமாகும். பிறகு கடவுச்சொல்லை உள்ளீட்டு பயன்படுத்தலாம்.

error: Content is protected !!