News June 7, 2024

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்து பவுலிங் தேர்வு

image

கனடா – அயர்லாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி, இன்னும் சற்று நேரத்தில் நியூயார்க் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதில், டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால், எந்த அணி வெற்றி கணக்கை தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஹாட்ஸ்டாரில் காணலாம். யார் வெற்றி பெறுவார்?

News June 7, 2024

காங்கிரஸுக்கு புத்துயிர் அளித்த ராகுல் காந்தி

image

இந்தியாவில் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெல்வதற்கு அவரது நியாய யாத்திரை முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதே நேரம், நியாய யாத்திரையின் போது ஏற்பட்ட பிரச்னைகளால் நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகி சென்றதும், மம்தா பானர்ஜி ஒதுங்கி இருந்ததும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

News June 7, 2024

பிறப்பு சான்று பெறுவதற்கு இன்னொரு வாய்ப்பு

image

“கடைசி வாய்ப்பு.. உடனே போங்க” என தலைப்பிட்டு பிறப்பு சான்று பெறுவதற்கு தமிழக அரசு இன்னொரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, குழந்தை பிறந்து 15 வயது நிரம்பியும் பிறப்பு சான்றிதழில் பெயர் இணைக்காதோருக்கு 2024 டிச. 31ஆம் வரை அவகாசம் அளிக்கப்படுவதாகவும், இனி வரும் காலங்களில் கால அவகாச நீட்டிக்க வாய்ப்பில்லை. எனவே, இதுவரை பிறப்பு சான்றிதழ் வாங்காதவர்கள் உடனே வாங்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

News June 7, 2024

பிரதமர் பதவியேற்பு விழா; ரஜினிக்கு அழைப்பு

image

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் NDA கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமராக உள்ளார். வரும் 9ஆம் தேதி அதற்கான பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆந்திர முதல்வராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவிற்கும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News June 7, 2024

வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 12 வரை அவகாசம்

image

வேளாண்மை, மீன்வள பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. 6,072 இளம் அறிவியல் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இந்நிலையில், கால அவகாசத்தை ஜூன் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 26,357 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், 2,428 பேர் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

News June 7, 2024

ஆப்கானிஸ்தான் பலம் வாய்ந்த அணி: கேன் வில்லியம்சன்

image

ஆப்கானிஸ்தான் அணி ஒவ்வொரு ஆண்டும் தங்களை வலுப்படுத்தி வருவதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். மிக வலுவான சுழற்பந்து வீச்சாளர்கள் ஆப்கன் அணியில் உள்ளதாக தெரிவித்த அவர், வெற்றிகளை குவித்து வரும் அந்த அணி கடினமான சவாலை எதிரணிகளுக்கு தரும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். முதல் வெற்றியை ஏற்கனவே ஆப்கான் அணி பெற்றுள்ள நிலையில், நாளை அந்த அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

News June 7, 2024

ஆட்சி நீடிக்குமா என்பதை காலம் முடிவு செய்யும்

image

பாஜக ஆட்சி நீடிக்குமா? இல்லையா? என்பதை காலம் முடிவு செய்யும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இந்திய அளவில் தார்மீக வெற்றி பெற்றதை கொண்டாடுவதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பிய அவர், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தும் பாஜக நிர்வாகிகள் சோகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கூட்டணி அரசை மோடி சமாளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.

News June 7, 2024

பாஜகவில் வெடித்த கோஷ்டி பூசல்

image

அண்ணாமலை தவறான தகவல்களை மத்திய பாஜக தலைமைக்கு கூறி வருவதாக அக்கட்சியின் அறிவுசார் பிரிவு மாநில தலைவர் கல்யாணராமன் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் தோல்வி தொடர்பாக பேசிய தமிழிசை மற்றும் வேலுமணியின் கருத்து சரியானதே என்ற அவர், தேர்தல் தோல்வி தொடர்பாக பாஜக நிர்வாகிகள் விவாதிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை தவிர யாரும் வளர கூடாது என அண்ணாமலை நினைப்பதாகவும் கூறியுள்ளார்.

News June 7, 2024

சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் பவுலர்

image

அமெரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ரவுஃப் மீது முன்னாள் அமெரிக்க வீரர் ரஸ்டி தெரோன் குற்றம்சாட்டியுள்ளார். நேற்றைய போட்டியில், ஹாரிஸ் தனது விரல் நகங்களால் பந்தின் மேற்பகுதியை சுரண்டி சேதப்படுத்தியதாகவும், இதுபோன்ற செயல்களை ஐசிசி கண்டிக்குமா? இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என தனது X பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

News June 7, 2024

கனிமொழியை சந்தித்த நடிகை ராதிகா

image

தூத்துக்குடி எம்.பி. கனிமொழியை நேரில் சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை நடிகை ராதிகா வழங்கினார். வரலட்சுமியின் திருமணம் அடுத்த மாதம் (ஜூலை 2 ) நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை முக்கிய பிரமுகர்களுக்கு நடிகை ராதிகாவும், சரத்குமாரும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நேற்று ரஜினிகாந்துக்கு அழைப்பிதழை ராதிகா, சரத்குமார் தம்பதியினர் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!