India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திர முதல்வராக வருகிற 12ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், தன்னால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்பட கூடாது என தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். தான் செல்லும் போதும், வரும்போதும், சாலைகளின் இருபுறமும் மக்களை நிற்க வைப்பது, கடைகளை மூட சொல்வது போன்ற எந்த ஒரு இடையூறும் இருக்க கூடாது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மம்முட்டி மற்றும் நயன்தாராவை வைத்து கௌதம் மேனன் படம் இயக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தை மம்முட்டியே தயாரிக்க இருப்பதாகவும், விரைவில் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கௌதம் மேனனின் கடைசி 3 படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், துருவ நட்சத்திரம் நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ளது குறிப்பிடதக்கது.
உலகக் கோப்பை T20 தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 84 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 159 ரன்கள் எடுத்தது. 160 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசி., அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 15.2 ஓவரில் 75 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆப்கன் அணியில் ரஷித்கான், ஃபசல்ஹக் பாரூக்கி தலா 4 விக்கெட்டை கைப்பற்றினர்.
பிரதமராக 3ஆவது முறையாக நாளை இரவு 7.15 மணிக்கு மோடி பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் வங்கதேசம், பூடான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, மொரிசீயஸ், செசல்ஸ் ஆகிய நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். 2014 பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் கலந்து கொண்ட நிலையில், இம்முறை அந்நாட்டு பிரதமருக்கும், மியான்மர், ஆப்கானிஸ்தான் நாடுகளின் தலைவர்களுக்கும் இந்தியா அழைப்பு விடுக்கப்படவில்லை.
மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் பலம் 99ஆக உயர்ந்துள்ளதால், அக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வழங்கப்படவுள்ளது. டெல்லியில் இன்று நடைபெறும் அக்கட்சியின் எம்பிக்கள் கூட்டத்தில், அந்தப் பதவிக்கு ராகுல் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. ராகுல் அப்பதவியை விரும்பவில்லையெனில், மணிஷ் திவாரி, கவுரவ் கோகாய், வேணுகோபால், சசிதரூர் ஆகியோரில் ஒருவர் தேர்வாகலாம் எனத் தெரிகிறது.
உலகக் கோப்பை T20 தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் டக் அவுட் ஆகிய நிலையில், கான்வே, வில்லியம்சன், மிட்செல் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினர். தற்போது அந்த அணி 10 ஓவரில் 54/7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ரஷித்கான், ஃபசல்ஹக் பாரூக்கி தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர்.
எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த காரணத்தினாலோ என்னவோ ராமோஜி ராவுக்கு எப்போதுமே விவசாயிகள் மீது தனிப்பாசம் இருந்தது. 1969இல் விவசாயிகளுக்காக ‘அன்னதாதா’ என்ற இதழைக் கொண்டு வந்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நடைமுறைகள், தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள் ஒரு வழிகாட்டி போல வெகுசனங்களிடம் கொண்டு சேர்த்தது. அவரது ஈ டிவி தான் விவசாயம் குறித்து தனி நிகழ்ச்சி நடத்திய முதல் தொலைக்காட்சியாகும்.
தமிழ்நாட்டில் ஜூன் 17ஆம் தேதி (திங்கள்) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து மூன்று நாள்கள் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வருகிறது. ஆம்!, ஜூன் 15 (சனி), ஜூன் 16 (ஞாயிறு) மற்றும் பக்ரீத் பண்டிகை நாளான ஜூன் 17 (திங்கள்கிழமை) அரசு பொதுவிடுமுறை என தொடர்ந்து 3 நாள் விடுமுறை வருகிறது. விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர் இப்போதே திட்டமிடுங்கள்.
674 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ வளாகமான ராமோஜி ஃபிலிம் சிட்டியை ஹைதராபாத்தில் அமைத்தவர் செருகூரி ராமோஜி ராவ் (87). ஒருங்கிணைந்த ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருப்புடியில் 16 நவ 1936 அன்று எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். B.Sc., பட்டதாரியான அவர், விளம்பர ஏஜென்ஸி பணியாளராக தனது வாழ்வைத் தொடங்கிய பின்னாளில் தனிமனித ஆளுமையாக உருவெடுத்தார்.
1962இல் மார்க்கதரிசி நிதி நிறுவனத்தைத் தொடங்கிய அவர், கால் பதிக்காத துறைகளே இல்லை என்ற அளவில் அனைத்து துறைகளிலும் முத்திரைப் பதித்தார். ராமோஜி குழுமத்தின் பெயரில் ஈநாடு பத்திரிக்கை, ஈ டிவி தொலைக்காட்சி, விளம்பர ஏஜென்ஸி, கல்வி, விடுதி, சுற்றுலா, திரைப்படத்துறை என தனி சாம்ராஜ்ஜியத்தையே அவர் உருவாக்கினார். 2016இல் பல்துறை வித்தகரான அவருக்கு மத்திய அரசு, பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
Sorry, no posts matched your criteria.