News June 8, 2024

தொடங்கியது காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

image

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. சோனியா காந்தி, ராகுல், வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பது, தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News June 8, 2024

காதல் நினைவுகளை பகிர்ந்த நடிகை டாப்சி

image

ஆடுகளம், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி, டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போவை அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்டார். தனது காதல் நினைவுகளை பகிர்ந்துள்ள அவர், மத்தியாசை பார்த்ததும் தாம் காதல் வயப்படவில்லை, திரும்பத் திரும்ப பார்க்க ஆரம்பித்ததுமே காதல் வயப்பட்டதாகக் கூறியுள்ளார். மத்தியாஸ் தனக்கானவர் என உணர்ந்ததும் 2 பேரும் காதலை வெளிபடுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News June 8, 2024

2026 தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியமைக்கும்: இபிஎஸ்

image

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு எதிராக திட்டமிட்டு பொய் தகவலும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருவதாகவும், இதில் அமைச்சர் ரகுபதியும் ஒருவர் ஒன்றும் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவில் இருந்து கட்சி மாறி திமுக சென்ற ரகுபதிக்கு, அதிமுக குறித்து விமர்சிக்க அருகதை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

பாஜகவுடன் கூட்டணி இல்லை: இபிஎஸ்

image

பிரிந்து இருக்கும் அதிமுகவினர் மீண்டும் இணைய வேண்டும் என, ஓபிஎஸ் – சசிகலா அறைகூவல் விடுத்திருந்தனர். இந்நிலையில், சசிகலா, ஓபிஎஸ்ஸின் பெயரைக் குறிப்பிடாமல், எதிரிகளோடு சேர்ந்து அவர்கள் குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய இபிஎஸ், இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுடன் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

News June 8, 2024

சட்டமன்றத் தேர்தல் வேறு, மக்களவைத் தேர்தல் வேறு

image

சட்டமன்றத் தேர்தல் வேறு, மக்களவைத் தேர்தல் வேறு என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டிருந்தால் அதிக தொகுதிகளில் அதிமுக வென்றிருக்கும் எனக் கூறப்படுவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது, சூழ்நிலைக்கேற்ப கூட்டணி வைக்கப்படுகிறது என்று பதிலளித்தார்.

News June 8, 2024

2019 தேர்தலை விட அதிமுகவுக்கு அதிக வாக்குகள்

image

2019ஆம் ஆண்டு தேர்தலில் பெற்றதை விட 2024ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் பெற்றிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் 2019 தேர்தலை விட திமுகவும், பாஜகவும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளதாகவும், ஆனால், அக்கட்சிகள் அதிக வாக்குகள் பெற்றதுபோல தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

News June 8, 2024

8 முறை மோடி வந்தும் பாஜக வெற்றி பெறவில்லை: இபிஎஸ்

image

தமிழகத்திற்கு 8 முறை மோடி தேர்தல் பிரசாரம் செய்ய வந்தும் பாஜக ஓரிடத்தில் கூட வெல்லவில்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக மோடி, மத்திய அமைச்சர்கள் ஆகியோர் ஆட்சி அதிகாரம், பண பலத்தை வைத்து பிரசாரம் செய்ததாகவும், ஆனால், அதிமுகவில் தாமும், தேமுதிகவில் பிரேமலதா உள்ளிட்ட சிலர் மட்டுமே பிரசாரம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

News June 8, 2024

ஐந்தே நாளில் ₹237 கோடியாக உயர்ந்த சொத்து மதிப்பு

image

மத்திய அரசை தீர்மானிக்கும் அளவுக்கு மகத்தான வெற்றியை TDP பெற்றிருப்பது தெரிந்ததே. அரசின் முக்கிய முகமாக இப்போது சந்திரபாபு இருப்பதால், அவரது குடும்ப நிறுவனமான ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட்டின் மதிப்பு பங்குச்சந்தையில் எகிறி வருகிறது. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு 55% உயர்வு கண்டு, ஒரு பங்கின் விலை ₹661ஐ எட்டியுள்ளது. இதன் காரணமாக CBN-இன் மகன் லோகேஷின் சொத்து மதிப்பு ₹238 கோடியாக உயர்ந்துள்ளது.

News June 8, 2024

நாட்டு மக்களிடையே ராகுல் செல்வாக்கு உயரவில்லை: பி.கே.

image

நாட்டு மக்களிடையே ராகுல் காந்தியின் செல்வாக்கு உயரவில்லை என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றதால், அக்கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள் இடையேதான் ராகுலுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ள அவர், பாஜக வாக்கு வங்கியில் மாற்றம் ஏற்படவில்லை, மோடி மீதும் மக்களுக்கு பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்றும் தெரிவித்தார்.

News June 8, 2024

ராமோஜி ராவ் மறைவு : ரஜினி இரங்கல்

image

எனது வழிகாட்டியும் நலம் விரும்பியுமான ராமோஜி ராவ் மறைவு செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் என்று நடிகர் ரஜினி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். பத்திரிகை, சினிமா, அரசியலில் சிறந்த கிங் மேக்கராக வரலாறு படைத்தவர் என்று புகழாரம் சூட்டிய அவர், ராமோஜி என் வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!