India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அசைக்கவே முடியாத சக்தி பாஜக என்று மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் நொறுக்கப்பட்டுள்ளதாக தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக, இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய நிலைக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
SMS மூலம் ரயில் டிக்கெட் கட்டண விவரத்தை எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு நமது செல்ஃபோன் எண்ணில் இருந்து 139 என்ற எண்ணுக்கு கீழ்காணும் செய்தியை SMSஆக அனுப்ப வேண்டும். FARE என டைப் செய்து, ரயில் எண், பயணத் தேதி, புறப்படும் மற்றும் சென்று சேரும் இடங்களின் எஸ்டிடி கோடுகள், வகுப்பை இடைவெளிவிட்டு குறிப்பிட்டு அனுப்பினால், கட்டண விவரம் அனுப்பப்படும்.இதற்கு கட்டணம் ₹3 வசூலிக்கப்படும்.
மோடியின் 3.O அமைச்சரவையில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவருக்கு இடம் வழங்கப்படுவது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியாகிவிட்டதாகவும், தமிழிசை அல்லது எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தமிழக பாஜக தலைவராக வானதி, நயினார் மற்றும் புதிதாக ஒருவரின் பெயரும் பரிசீலனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்துடனான தனது தகவல் தொடர்பு இடைவெளியால்தான் சாதகமான முடிவு கிடைக்கவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸுக்கு இடம் கிடைக்கவில்லை. இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், எப்படி இருந்தாலும் சிறப்பாக பேட்டிங் செய்து ரஞ்சி கோப்பையை வென்றால், கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு சரியான பதிலாக அது இருக்கும் எனக் கூறினார்.
தேர்தல் முடிவு வெளியான பிறகு முதல்முறையாக இன்று பேட்டி அளித்த இபிஎஸ், திமுக, பாஜக, அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக பொறிந்து தள்ளினார். 2026இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியமைக்கும் எனவும் அவர் கூறினார். நம்பிக்கையுடன் அவர் இதை கூறினாலும், குரலில் தேர்தலில் வெல்ல முடியவில்லையே என்ற ஏமாற்றமும் தொணித்ததாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ப்ளஸ் 1 சேர உள்ள மாணவர்கள் தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு ஜூன் 11 – 26 வரை https://www.dge.tn.gov.in-இல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் தேர்ச்சிபெற்றால் இளநிலை படிப்பு வரை மாதம் ₹1,000 வழங்கப்படும். இந்நிலையில், ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறந்த உடன், இத்தேர்வு தொடர்பான விவரங்களை பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டி வைத்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் திமுக கூட்டணியை வெற்றிபெற செய்து, தமிழ்நாட்டு மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறார்கள் என்று தமிழச்சி பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக்கூடும். அதனால்தான் இந்த வெற்றிக்கு “ நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது” என பெயர் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில், தற்போதைய அதிபர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹண்டர் பைடன் மீது போதைப்பொருள் பயன்பாடு, சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்க முயற்சித்தது உள்ளிட்ட வழக்குகளில் டெலோவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மகன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால், அவரை மன்னிக்கவே மாட்டேன் என ஜோ பைடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் தொடங்கிய நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு டெல்லி மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்றது. தற்போது 60% படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெறும் 40 நாள்களில் 60% படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்த ஆண்டு இறுதியிலேயே படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததற்கு சீனா அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவிப்பதே காரணமாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ₹1,520 குறைந்துள்ளது. கடந்த 18 மாதங்களாக தங்கத்தை வாங்கி குவித்து வந்ததை சீனா தற்போது நிறுத்தி வைத்திருப்பதே, தங்கத்தின் விலை சரிவிற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.