India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து, மக்களவைக் குழுத் தலைவராக- சுதீப் பந்தோபாத்யாய், துணைத்தலைவராக- ககோலி கோஸ் தஸ்திதார், கொறடாவாக- கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் குழுத் தலைவராக- டெரெக் ஓ பிரையன், துணைத்தலைவராக- சகரிகா கோஸ், கொறடாவாக- நதிமுல் ஹக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மின்சார வாகனங்களுக்கு சூரிய ஆற்றல் மூலம் சார்ஜ் செய்யும் வகையிலான சிறப்பு அடாப்டரை உருவாக்கி ஜோத்பூர் ஐஐடி மாணவர்கள் அசத்தியுள்ளனர். சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலம், EV வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வகையில், இந்த அடாப்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அடாப்டரை ரூ.1,000-க்கும் குறைவான விலையில், விரைவில் சந்தை விற்பனைக்கு கொண்டுவர ஜோத்பூர் ஐஐடி திட்டமிட்டுள்ளது.
பாரத் ஜோடோ நடைப்பயணம் எங்கெல்லாம் நடைபெற்றதோ அங்கெல்லாம் காங்கிரஸின் வாக்கு சதவீதமும், வெற்றி வாய்ப்பும் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகழாரம் சூட்டியுள்ளார். பாஜகவின் சர்வாதிகாரம் & ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதாகக் கூறிய அவர், INDIA கூட்டணி நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
மத்தியபிரதேசத்தில் பிரியால் யாதவ் என்ற விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண், மாநில பணியாளர் தேர்வாணைய தேர்வில் 6ஆவது இடம் பிடித்து துணை ஆட்சியராக தேர்வாகியுள்ளார். இதில், கவனிக்கத்தக்க சாதனை என்னவெனில், அவர் 11ஆவது வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர். எனினும், விடாமுயற்சியால், 2019இல் மாவட்ட பதிவாளர், 2020இல் கூட்டுறவு துணை ஆணையராக தேர்வான அவர், தற்போது துணை ஆட்சியராகவும் தேர்வாகியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தியை தேர்வு செய்துள்ளது காங்கிரஸ் எம்பிக்கள் குழு. டெல்லியில் இன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் சோனியாவின் பெயரை மல்லிகார்ஜுன கார்கே முன் மொழிந்தார். இதனை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டதால் சோனியா ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையேயான டி20 உலகக் கோப்பை லீக் போட்டி, இன்றிரவு 10.30 மணிக்கு பார்படாஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. 2007ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த எந்தவொரு டி20 உலகக் கோப்பை போட்டியிலும், ஆஸி., அணி இங்கிலாந்தை வீழ்த்தியது கிடையாது. நடப்பு உலகக் கோப்பையில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற ஆஸி., அணி, 17 வருட வரலாற்றை இன்று மாற்றி அமைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். யார் வெற்றி பெறுவார்?
அதிமுகவுடன் பாஜக கூட்டணியமைத்திருந்தால் சில தொகுதிகளை வென்றிருக்கலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை டெல்லியில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அண்ணாமலை இல்லாமல் தன்னிச்சையாக தமிழிசை செயல்படுவது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தினை X தளத்தில் பதிவிட்டு ஆலோசனை நடத்தியதை குறிப்பிட்டிருக்கிறார் தமிழிசை.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் வென்ற திமுக கூட்டணி, சட்டமன்றத் தொகுதி வாரியாக 221 இடங்களில் அதிக வாக்குகள் பெற்றுள்ளது. ADMK (எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை) 8 தொகுதிகளிலும், PMK (பெண்ணாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி) 3 தொகுதிகளிலும், DMDK திருமங்கலம், அருப்புக்கோட்டையிலும் அதிக வாக்குகள் பெற்றுள்ளது.
ஆங்கிலேயே ஆதிக்கத்தை பற்றிய மிகைப்படுத்தல்களும், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களே தமிழகத்தில் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், தமிழகத்தில் தேசிய அளவிலான சுதந்திர போரட்ட தலைவர்கள் பற்றிய பாடங்கள் இல்லை எனவும், இந்தியா என்பது அந்நியர்கள் அடையாளப்படுத்திய வார்த்தை என்றும், இந்தியா என்பதும் பாரத் என்பதும் ஒன்றல்ல எனவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.